tamilnadu

img

ஜிடிபி வளர்ச்சியை 0.2 சதவிகிதம் குறைந்தது ஐஎம்எப்

புதுதில்லி, ஏப்.10-2019 - 2020 நிதியாண் டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று, ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டு நாணய நிதியம், கடந்த 2019 ஜனவரியில் கணித்திருந்தது.தற்போது, அதனை 0.2 சதவிகிதம் குறைத்து, 2019 - 20 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவிகிதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும், 2020 - 21 நிதியாண்டில் ஜிடிபி 7.5 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவையும் அண்மையில் தங்களின் ஜிடிபி கணிப்புகளை வெளியிட்டன. அதில், இரு வங்கிகளுமே 2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தன. இந்நிலையில், அந்த கணிப்பையொட்டியே, ஐஎம்எப்- அமைப்பும் ஜிடிபி 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

;