tamilnadu

img

பாஜக தேர்தல் சின்னத்தை வரைந்தால் 4 மதிப்பெண்... காவிமயம் ஆக்கப்பட்ட 12-ஆம் வகுப்பு கேள்வித்தாள்

மணிப்பூர்:
மணிப்பூரில் 12-ஆம் வகுப்பு மாணவர் களுக்கு வழங்கப்பட்ட, ‘அரசியல் அறிவியல்’ பாடத்திற்கான வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகள் சர்ச்சையைக் கிளப்பி யுள்ளன. வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 32-ஆவது வினாவில், பாஜக-வின் தேர்தல் சின்னத்தை வரையுமாறும், இந்திய தேசியத்தின் கட்டமைப்பில், முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகள் நான்கை எழுதுமாறும் கூறி, அவற்றுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தற்போது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. “மாணவர்கள் மத்தியில் ஒரு சார்பான அரசியல் மனோபா வத்தை உருவாக்க இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜாய்கிஷன் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.  ஆனால், “வினாத்தாள் தயாரிப்பில் பாஜக-வுக்கு எந்த பங்கும்இல்லை” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சொங்கதம் பிஜாய் நழுவியுள்ளார்.மாநிலத்தின் கல்விக் குழு தலைவரான எல். மகேந்திர சிங்கோ, “கேள்விகள் எதுவும்பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்படவில்லை” என்று நியாயப்படுத்தியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பைரேன் சிங் முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;