tamilnadu

img

இந்தியாவிலும் ஹிட்லர் ஆட்சி...

புதுதில்லி:
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடைபெறத் துவங்கியிருப்பதாக பொருளாதாரத் துறையில் ‘நோபல் பரிசு’பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜிஎச்சரிக்கை செய்துள்ளார்.ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, இந்துத்துவா வெறிக்கும்பல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ள பின்னணியில், அபிஜித் பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார். 

“நான் படித்த ஜேஎன்யு-வில்இப்போது நடந்து வரும் சம்பவங்கள்வருத்தமும், மிகுந்த கவலையும் அளிக்கின்றன. அரசு இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து உண்மையை கொண்டு வர வேண்டும். மொத்தமாக எல்லோரின் குரலையும் கேட்க வேண்டும். யாருடைய குரலையும் மதிக்காமல் இருக்கக் கூடாது” என்று அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார். மேலும், “இந்தியாவின் மதிப்பு சரிந்து கொண்டு இருக்கிறது” என்றும், “இந்தியாவின் மதிப்பை காப்பதற்கு அரசு நினைத்தால் உடனடியாகசெயல்பட வேண்டும்” என்று கூறியுள்ள அபிஜித் பானர்ஜி, “ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் போது நடந்ததுதான், இப்போது இந்தியாவில் நடக்கிறது; அங்கு நாஜி ஆட்சியில் வந்த மாற்றங்கள், சட்டங்கள் இன்றுஇந்தியாவிலும் வரத் தொடங்கி உள்ளது; அதை நாம் அனுமதிக்கக் கூடாது”என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.1983-இல் கல்லூரி நிர்வாகத் திற்கு எதிராக போராடியதற்காக தன்மீது, கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டதையும், அந்த வழக்கில், தான் 10 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதையும் அபிஜித் பானர்ஜி  நினைவுகூர்ந்துள்ளார்.

;