tamilnadu

img

வரலாறு விடுக்கும் எச்சரிக்கை - சு.பொ.அகத்தியலிங்கம்

“இத்தனை ஆயிரம் பேரின் வேலை க்கு ஆப்பு” என செய்தி வெளி யிட்டு மகிழ்கிறது தினமலர் ஏடு.

வேலையின்மை பெருகுவதை வெறும் ஒரு வரிச் செய்தியாய் கடந்து போகிறது பெரும்பாலான ஊடகங்கள்.  “மனிதம் கொன்று மனிதம் தின்று” வாழ்கிற இந்த ஊடகங்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? “ஒருவருக்கு வேலை போகிறது என்றால் ஏன் கூப்பாடு போடுகிறீர்கள்? தகுதியை வளர்த்திருந்தால் வேறு வேலை கிடைக் குமே...” என நரமாமிச பட்சிணியான சங்கிகள் வேதாந்தம் பேசுகிறார்கள். குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், பானு கோம்ஸ், ஹெச்.ராசா போன்றவர்கள் திற மைக்கும் வேலையின்மைக்கும் சாமர்த்திய மாக முடிச்சுப் போடுகிறார்கள். எனவே அதுகுறித்தே கொஞ்சம் யோசியுங்கள்... எடுத்துக்காட்டாய் ஐடி எனப்படும் கம்ப்யூட்டர் துறையில் ஒருவர் வேலை இழக்கிறார் எனில் முதலில் அவர் சந்திக்கும் சவால்கள்...

முதலாவதாக, வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ அதாவது தவணைத்தொகை உடனே கழுத்தை நெரிக்கத் துவங்கிவிடும். கார்/பைக் தவணை, பிள்ளைகள் பள்ளி  அல்லது காலேஸ் பீஸ்  என ஒவ்வொன்றும் மென்னியைத் திருகும். திடீரென்று பள்ளத்தில் விழுந்துவிட்ட உறுத்தல் மன  உளைச்சலாகும். உடல் நலம் பாதிக்கப்படும். வேறு வேலை தேடுவது அவ்வளவு சுலபமல்ல. முதலாளித்துவம் ஒவ்வொரு தொழிலாளியையும் இயந்திரத்தின் இன்னொரு பாகமாக்கி விட்டது. பழைய தச்சுத் தொழிலாளி ஒரு வீட்டு வேலையை மொத்தமாகச் செய்வார். இப்போதோ ஒவ்வொரு இயந்திரத்தில் ஒவ் வொன்றை செய்து குவிக்கும் ரோபர்ட்டா கவே பழக்கி இருக்கிறது நவீனத் தொழில். ஐடியிலும் அதுதான் நிலை.

ஆக எங்கு போனாலும் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். ஆலை மூடப்பட்டதால் வாழ்விழந்தோர் செக்யூரிட்டியாய் நொந்து வெந்து சாம்பலா வதை இந்த சங்கிகள் ஒரு போதும் உணர மாட்டார்கள். வேலை பறிப்பு முதலாளித்துவத்தின் பொழுதுபோக்கும் லாபக் கணக்கு; உழைப்ப வருக்கோ உயிரின் வாதை; வாழ்வின் பெருந்துயர். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். கலை, தொழில் நுட்பம் திறமை யெல்லாம் வாய்ப்புக் கிடைத்த பின் தொடர்ந்து அதே களத்தில் இயங்கும் போது கைவரப்பெறுவதே.

ஒரு சின்ன கேள்வி. எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் தங்க, வெள்ளிப் பதக்கம் வாங்கியவரே ஆயினும்- அந்தத் துறையில் உலகம் வியக்கும் சாதனை ஏதே னும் படைத்ததாகச் சொல்ல முடியுமா? உலகில் பெரும் கண்டு பிடிப்புகள், சாத னைகள் செய்த பெரும்பாலோரின் வரலாறு நமக்கு வேறுமாதிரியாகவே சொல்கிறது. கல்லூரியை விட்டு வெளியே வரும் போதே ஒருவன் அனைத்தும் தெரிந்த வித்த கனாய் வெளிவருவது என்பது முயற் கொம்பே!

ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஒவ்வொரு விதமான தேவை இருக்கும் .படித்த அனைத் தையும் செய்து சோதித்து மேலும் மேலும் வல்லவராக தொழிற்சாலை உற்பத்தி முறை இடம் தராது. ரெடிமேட் கார்மெண்ட்ஸில் பணிபுரியும் பெண்ணோ ஆணோ ஒரே வித வேலைக்கே பழக்கப்படுத்தப்பட்டவர்களாகவே இருப்பர்.  ஆட்டோமொபைலிலும் அதுவே நிலை.  ஐடியில் பெரும்பாலும் சர்வீஸ் எனப்படும் ஒருவகை குமாஸ்தா வேலையையே பழகி இருப்பர். வேலை இழந்தவர்கள் திறமை இருந்தால் மறு வேலை எளிதாய்ப் பெறுவார் என வறட்டு வேதாந்தம் பேசுவதும்; படித்தாய் பட்டம் –பெற் றாய் - திறமை இல்லை. திறமை இருந்தால் வேலை கிடைத்திருக்கும் என வாதிடுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான வாதமே!

வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி [டெவல்ப் மென் வித்அவுட் எம்ப்ளாய்மெண்ட் ஆப்பர்சூனிட்டி] என்கிற மலட்டுப் பாதையில் மரணவேகத்தில் அரசு சென்றதின் கோர விளைவே வேலையிழப்பும் பெருகும் வேலையின்மையும். அதுவும் அனுமார் வால் மாதிரி நீளும் என்றுகூடச் சொல்ல முடியாது. அனுமார் வால் இராமாயணத்தில் ஒரு பக்கம்  மட்டுமே நீண்டது. வேலைதேடி இளைஞர் ஒரு புறமும் வேலையிழந்தோர் மறுபுறமும் என இருபக்கமும் நீண்டு கொண்டே போகும் இந்த வேலையின்மை தான் இவர்களின் ராமராஜ்யம்.

வேலையின்மை பெருகப் பெருக சமூகக் குற்றங்கள் பெருகும்; சாதி, மதக் கலவரங்கள் அதிகரிக்கும்; இதன் விளைவு யார் இந்த கொடுமைக்கெல்லாம் முதல் குற்றவாளியோ அவர் தப்பிக்க பாதிக்கப் பட்டவர்களே துணை போகும் பேரபாயம் ஏற்படும்.

ஏன் வேலை இல்லை?
ஏன் வேலை பறிக்கப்படுகிறது?
ஏன் ஆலைமூடல், ஆட்குறைப்பு நடக்கிறது?
குற்றவாளி யார்?

இக்கேள்விகளை எழுப்பி விடைதேட இளைஞர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இல்லையேல் இந்தியா எத்தியோப் பியா ஆகும். சோற்றுக்கும் துணிக்கும் அடித்துக் கொண்டு சாவோம். கார்ப்பரேட்டுகளும் அவர் சார்ந்த சாமியார்களும் உல்லாசத்திலும் அதிகார போதையிலும் திளைப்பர். இது வரலாறு நமக்குச் சொல்லும் எச்சரிக்கை!!!

;