tamilnadu

img

நாட்டில் பணியமர்த்தல் விகிதம் 62 சதவிகிதம் குறைந்தது.... வேலைவாய்ப்பு இணையதள நிறுவனம் தகவல்

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால், இந்தியாவில் பணியமர்த்தல் விகிதம் 62 சதவிகிதம் வரை குறைந் துள்ளது என்று நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான நாக்ரி.காம் (Naukri.com) கூறியுள்ளது.
இதுதொடர்பாக நாக்ரி.காம்ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:கடந்த 2019 ஏப்ரல் மாதத்தை விட2020 ஏப்ரலில், உணவகங்கள், பயணம், விமானத்துறை என பல்வேறு துறைகளில் 90 சதவிகிதம் அளவு வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. மருத்துவத் துறை, ஆட்டோ ஆன்சிலரி துறை, நிதித் துறை ஆகியவற்றில்70 சதவிதத்துக்கும் அதிகமாக பணியமர்த்தல் விகிதம் குறைந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் மருந்தகம், பயோடெக், மருத்துவ ஆராய்ச்சி, ஐடி மென்பொருள் சேவை, காப்பீடு ஆகிய துறைகளில் பாதிப்பு சற்று குறைவாக இருக்கிறது.

நகர வாரியான கணக்கைப் பொறுத்தவரை தில்லியில் 70 சதவிகிதம், சென்னையில் 62 சதவிகிதம், கொல்கத்தாவில் 60 சதவிகிதம், மும்பையில் 60 சதவிகிதம் பணியமர்த்தல் விகிதம் குறைந் துள்ளது. இது ஆரம்ப நிலையிலிருந்து, அனுபவமுள்ளவர்களை பணியமர்த்துதல் என எல்லா நிலைகளிலும் எதிரொலித் துள்ளது. 8 முதல் 12 வருட அனுபவமுள்ளவர்களை பணியமர்த்துவது 55 சதவிகிதமும், மூத்த பதவிகளுக்கான 13முதல் 16 வருட அனுபவமுள்ளவர் களைப் பணியமர்த்துவது 52 சதவிகிதமும், தலைமைப் பொறுப்புக் கான 16 சதவிகிதத்திற்கும் அதிகமானஅனுபவமுள்ளவர்களைப் பணியமர்த்துவது 50 சதவிகிதமும் குறைந் துள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

;