tamilnadu

img

முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவா கும்பல்....

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, வடகிழக்கு தில்லியில், முஸ்லிம்மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,அவர்கள் மீது, கடந்த பிப்ரவரி மாதம் சங்-பரிவாரங்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இரும்புக் கம்பி, உருட்டைக் கட்டை, கத்தி, வாள் என ஆயுதங்களைக் கொண்டுமுஸ்லிம்களைத் தாக்கியதுடன், துப்பாக்கிகளைக் கொண்டும் சுட்டனர். மசூதி, தர்கா மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினர். 
இந்த வன்முறையின் ஒருபகுதியாக, 9 முஸ்லிம்கள் கொன்று சாக்கடைக்குள் வீசப்பட்ட சம்பவத்தில், ஜதின் சர்மா, ரிஷப்சவுத்ரி, விவேக் பஞ்சால், லோகேஷ் சோலங்கி,பங்கஜ் சர்மா உள்ளிட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது, தில்லி கூடுதல்தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“தில்லியின் வடகிழக்கு பகுதியில், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதத்தினரை பழிவாங்குவதற்காக, “கட்டார் இந்துத் ஏக்தா” என்ற ‘வாட்ஸ்- ஆப்’ குரூப்பை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அதனை உருவாக்கியர் தலைமறைவாக உள்ளார். இந்த குரூப்பில் ஆரம்பத்தில் 125 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஆனால், மார்ச் 8-இல் 47 பேர் குரூப்பை விட்டு வெளியே வந்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிப்ரவரி 25 காலை முதல், மறுநாள் இரவு வரை,ஆனந்த் விஹார், கங்கா விஹார் பகுதிகளில் முஸ்லிம்களிடம் வம்பு இழுத்துள்ளனர். “ஜெய் ஸ்ரீராம்” என்று கூறச்சொல்லி தாக்கியுள்ளனர். பின்னர் “ஜெய் ஸ்ரீராம்”சொல்லாத முஸ்லிமை மிகக் கடுமையாக தாக்கி கொன்றுவிட்டு, உடல்களைக் கழிவுநீர்க் கால்வாயில் வீசியுள்ளனர். இதுபோல9 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளில் ஒருவரான லோகேஷ்சோலங்கி என்பவர் கடந்த பிப்ரவரி 25 அன்றுஅந்த வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு மெசேஜ்அனுப்பி உள்ளார். அதில், “நான் லோகேஷ்சோலங்கி... இந்துக்கள் யாருக்கேனும் உதவி வேண்டுமானால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.. என்னிடம் ஆட்கள் இருக்கிறார்கள். நிறைய ஆயுதங்களும் இருக் கின்றன. நான் இப்போதுதான் பாகீரதி விஹார்பகுதியில், 2 முஸ்லிம்களை கொன்று, சாக்கடையில் வீசிவிட்டு வந்தேன்” என்று பதிவிட்டுள்ளார். 

இப்படி லோகேஷ் சோலங்கி மெசெஜ்அனுப்பியதுடன், அதை உடனே அழித்துவிட்டு, அந்த குரூப்பில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். எனினும், தீபக் சிங் என்றஇன்னொருவரின் போனில் இருந்து லோகேஷ் சோலங்கியின் இந்த மெசேஜ் எடுக்கப்பட்டுள்ளது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கு, ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனிடையே முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் பாஜக கவுன்சிலர் கன்னையா லாலின் பெயர் குற்றப்பத்திரிகை
யில் விடுபட்டிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

;