tamilnadu

img

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது

என்கவுண்ட்டர் குற்றவாளிகளுக்கு மீண்டும் பணி வழங்கிய குஜராத் அரசு

இஷ்ரத் ஜகான் தாயார் சிபிஐ நீதிபதிக்கு கடிதம்

அகமதாபாத், அக்.2- குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் இளம்பெண் இஷ்ரத் ஜஹானுக்கு, இனி யும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று அவரது தாயார் ஷமீமா கௌசர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஆர்.கே. சுதாவாலாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் ஷமீமா எழுதியுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, அவரைக் கொலை செய்ய முயன் றதாக இஷ்ரத் ஜஹான் (19), ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, அக்பர் அலி ராணா, இஷன் ஜோஹர் ஆகி யோரை, குஜராத் காவல்துறை என் எவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது. ஆனால், இந்த என்கவுண்ட்டரை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இது போலி என்கவுண்ட்டர் என்று அறி க்கை சமர்ப்பித்ததால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, என்கவுண்ட்டர் தொடர்பாக, 11 மீது வழக்கு பதிவு செய்தது. அவர்களில் குஜராத் முன்னாள் காவல் துறைத் துணைத் தலைவர் டி.ஜி. வன்சாரா, காவல்துறை அதிகாரி என்.கே. அமீன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை யும் தாக்கல் செய்தது.

ஆனால், கடந்த 2019 மே மாதம், ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோர் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட  மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான பி.பி. பாண்டே 2018 பிப்ரவரியிலேயே விடு தலை செய்யப்பட்டு விட்டார்.  இவ்வாறு 3 முக்கிய அதிகாரிகள் விடு விக்கப்பட்டு விட்ட நிலையில், சிபிஐ அமைப்பும், குற்றவாளிகளுக்கு சாதக மான முறையில், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டது. தற்போது ஏனைய 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே. சுதாவாலா முன்னிலையில் விசாரணை நடை பெற்று வருகிறது.  இந்நிலையில்தான், சிபிஐ நீதிபதி ஆர்.கே. சுதாவாலாவுக்கு, போலி என் கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கௌசர் கடி தம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  “முஸ்லிம் பெண் என்ற ஒரே கார ணத்துக்காகவே இஷ்ரத் ஜஹான் மீது போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டு, பயங்கரவாதி என சித்தரிக் கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உள்பட அனைவ ருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. 

பணியில் இருக்கும் அரசு அதி காரிகள், செய்யும் தவறுகளுக்கு தண் டிக்கப்படுவதைக் கண்டிருக்கின்றேன். ஆனால் குஜராத்திலோ, என் மகள் கொல்லப்பட்டதை அனைவரும் வர வேற்றார்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தற்போது பெயிலில் இருக்கின்றார்கள். சிலர் குஜ ராத் அரசால், இழந்த பதவிகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இதனால், நான் முற்றிலும் நொறுங்கிக் கிடக்கிறேன். ஏதோ குற்றத்தை மறைக் கவே என்னுடைய மகள் கொல்லப்பட்டி ருக்கிறாள். ஆனால், குற்றம் செய்த வர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்வது போன்ற கலாச்சாரத்தைக் கண்டு என்னுடைய மனம் மிகவும் வேதனை அடைகிறது. தற்போது மேற்கொண்டு போராடும் நம்பிக்கையையும் தைரி யத்தையும் நான் இழந்துவிட்டேன். எனவே, இனிவரும் விசாரணைகளின் போது, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று என்னுடைய வழக்கறி ஞர் வ்ருந்தா க்ரோவரிடம் கூறிவிட்டேன்; நானும் இனிமேல் நீதிமன்றம் செல்ல மாட்டேன். என்னுடைய மகளுக்கு தேவையான நீதி கிடைக்கப்பட வேண்டும்தான். ஆனால் இந்த போராட்டத்தில் என் னால் தனியாக போராட முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 11 பேரைக் கைது செய்து, நீதியை நிலை நாட்ட வேண்டி யது சிபிஐயின் கடமை. அதை அவர் களிடமே விட்டுவிடுகிறேன். இவ்வாறு ஷமீமா கௌசர் கூறி யுள்ளார்.

;