tamilnadu

img

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை: காலம் நீட்டிக்கப்படுமா? பி.ஆர். நடராஜன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் மழுப்பல் பதில்

புதுதில்லி:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து மாநில அரசின் வரிவசூல் பாதிக்கப்பட்டதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு இழப்பீட்டுத்தொகை அளிக்கப்படும் என்று மேற்கொள்ளப்பட்ட முடிவு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு, அமைச்சர் மழுப்பலான விதத்தில் பதில் அளித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில் சொல்லக்கூடிய விதத்தில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுவிட்டது. மாறாக எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியாது. இதனை அரசு
தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட் டாக பி.ஆர். நடராஜன் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து எழுப்பியிருந்த கேள்வியும், அதற்கு அமைச்சர் அளித்துள்ள பதிலையும் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை அளிப்பதற்கான கால அளவை ஐந்தாண்டு காலத்திலிருந்து மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றுமாநில அரசாங்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனவா, ஆம் எனில், அவ்வாறு கோரிய மாநில அரசுகள் எவை, அதன்மீது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும், அவ்வாறு நீட்டிப்பதற்கு முடியாது என்று அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்றும் பி.ஆர். நட ராஜன் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதி லளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், சில மாநிலங்கள் காலநீட்டிப்பு செய்திட வேண்டும் என்றுகேட்டுக்கொண்டிருப்பது உண்மை தான் என்றும், ஒருசில மாநிலங்கள் ஐந்தாண்டுகளுக்கும் மேல் இதனை நீட்டித்திட வேண்டும் என்று கோரியிருக்கின்றன என்றும், சில மாநிலங்கள் இப்பிரச்சனையை ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்தின் விவாதங் களின்போதும் எழுப்பின என்றும், கூறியிருக்கிறார்.மேலும் அவர், இது தொடர்பாக, அரசமைப்புச்சட்டத்தின் 18ஆவதுபிரிவின் 101ஆவது சட்டத் திருத்தத் தின்படி, நாடாளுமன்றம் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படி ஜிஎஸ்டி அமலாக்கத்திலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்குத்தான் வருவாய் இழப்புக்காக இழப்பீடு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.எந்தெந்த மாநிலங்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் நீட்டித்திட வேண்டும் என்று கோரின என்ற கேள்விக்கோ, அது நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கோ, நீட்டிக்கப்படாது என்றால் அதற்கான காரணங்களையோ அமைச்சர் தெரி விக்கவில்லை.   (ந.நி.)

;