tamilnadu

img

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு.

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து என்றும் இல்லாத அளவிற்க்கு உயர்ந்துள்ளது. 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தே சென்ற வண்ணம் காணப்படுகிறது.இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  பவுனுக்கு 88/- உயர்ந்து  29,616/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போதைய நிலையில்  இன்று ரூ 216/- உயர்ந்து 29,832/- ரூபாய்க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

;