தமிழகத்தில் கிளேட் A13ஐ என்ற புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரேனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் புதிய வகை தொற்று பரவி வருகிறது. இதுவரை ஏ1, ஏ 2,ஏ3, பி1, பி2 என்ற வகை கொரோனா வைரஸ்களே பரவி வந்தது. தற்போது வைரஸில் மாற்றம் ஏற்பட்டு கிளேட் A13ஐ என்ற வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் வீரியம் சற்று தீவிரமாக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்த வகை வைரஸ் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மூலம் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வகை வைரஸ் தென்னிந்தியாவில் ஆந்திரம் தெலுங்கானா தமிழகத்தில் பரவி வருகிறது.
இந்த வைரஸ்க்கான தடுப்பு மருந்துகள் குறித்து ஆய்வுகளை நடை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.