tamilnadu

img

ஜிடிபி 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு...

புதுதில்லி:
கொரோனா தொற்று மற்றும் அதன்பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத் தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால், 2019-20  நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.1 சதவிகிதம் என்ற அளவிற்கு சரிந்து விட்டதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 5.7 சதவிகிதமாக இருந்தஜிடிபி, 2019-20 நிதியாண்டின் நான்காவதுகாலாண்டில் பலத்த அடி வாங்கியுள்ளது. 4.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது 3.1 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.2019-20 நிதியாண்டின் முதல் காலாண் டில் 5.2 சதவிகிதம், இரண்டாவது காலாண்டில் 4.4 சதவிகிதம், மூன்றாவது காலாண் டில் 4.7 சதவிகிதம் என ஜிடிபி வளர்ச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. “நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி4 சதவிகிதமாக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால்இப்போது அதை விட ஜிடிபி குறைந்திருக்கிறது; இது அதிர்ச்சி அளிக்கிறது” என்றுமத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் கொரோனா காரணமாக,மார்ச் 24 அன்றுதான் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய2020 ஜனவரி முதல் மார்ச் 31 வரையிலான காலாண்டு மதிப்பீட்டைத்தான் 3.1 சதவிகிதம் என்று புள்ளியல்துறை வெளியிட்டுள்ளது. ஒருவார பொதுமுடக்கம் மட் டுமே இந்த காலாண்டிற்குள் வருகிறது.எனவே, பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம், நடப்பு நிதியாண்டில்தான்முழுமையாக தெரியவரும் என்று கூறப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்தது...
2019-20 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகிதத்திலேயே வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. பின்னர் அதனை 3.8 சதவிகிதமாக மாற்றியமைத்தது. எனினும் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால், நிதிப்பற்றாக்குறை 0.8 சதவிகிதம் அதிகரித்து 4.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.2019-20 நிதியாண்டில் அரசுக்கு ரூ. 19 லட்சத்து 31 ஆயிரம் கோடி வருவாய் வரும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ. 17 லட்சத்து 5 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அரசின் செலவுகளைப் பொறுத்தவரையில், 2019-20 நிதியாண்டில் ரூ. 26 லட்சத்து 86 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ரூ. 26 லட்சத்து 98 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

;