புதுதில்லி:
விமானப்படையின் புதியதளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா ஓய்வுபெற உள்ளார். எனவே புதிய தளபதியைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விமானப்படை யின் துணை தளபதியாக உள்ள பதாரியா, 1990 ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார்.