tamilnadu

img

ராம்பக்த் கோபாலுக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? திலீப் கோஷூக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுதில்லி:
ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களைத்  துப்பாக்கியால் சுட்டவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, ‘ஷாகீன் பாக்’ பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தை பாஜக தலைவர்கள் தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சித்து வந்தனர். பணமதிப்பு நீக்கத்தின்போது, ஏடிஎம் வாசலில் சில மணிநேரம் நின்றதற்கே பலர் இறந்ததாக கூறினார்கள்; ஷாகீன் பாக்கில்பெண்களும் குழந்தைகளும் 4-5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் யாரும் இறக்கவில்லையே ஏன்? என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கேட்டிருந்தார். 

அதுமட்டுமல்ல, இங்கு போராடுவோருக்கு தலா 500 ரூபாய் நாளொன்றுக்கு வழங்கப்படுவதாகவும்  கொச்சைப்படுத்தி இருந்தார்.தற்போது ஷாகீன் பாக்போராட்டக்காரர்கள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், திலீப் கோஷ் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், இந்துத்துவ பயங்கரவாதி ராம்பக்த் கோபால் “துப்பாக்கியால் சுடுவதற்கு பணம் கொடுத்தவர்கள் யார்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

;