புதுதில்லி;
தில்லியில் நவம்பர் 30 நள்ளிரவு வரை தில்லி பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் எந்த நகரங்களில் எல்லாம், கடந்தஆண்டின் நவம்பர் மாதத்தில், சராசரியாக சுற்றுச்சூழல் காற்றின் தரம் மோச மற்றும் அதற்குக் மேல் இருக்கிறதோ, அந்த நகரங்களில் எல்லாம், இந்த தடை பொருந்தும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் கூறியிருக்கிறார்.தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில், மிதமான (Moderate) மற்றும் அதற்குக் கீழ் காற்றின் தரம் இருக்கும் இந்திய நகரங்களில், பசுமை பட்டாசுகளை விற்கலாம். ஆனால்பட்டாசுகளை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுபோன்ற பண்டிகை காலங்களில் வெடிப்பதற்கான நேரத்தை 2 மணி நேரமாகக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது மாநில அரசு குறிப்பிடும் நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும்.இந்தியாவின் மற்ற இடங்களில், பட்டாசுகளுக்கு முழு தடை விதிப்பதோ அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதோ, அதிகாரிகளின் விருப்பம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறி யிருக்கிறது.