tamilnadu

img

தேர்தலுக்கு பின்னரே திரைப்பட தேசிய விருதுகள்

திரைப்பட தேசிய விருதுகள் இந்த வாரம் அறிவிக்கப்பட இருந்த நிலையில் தேர்தலுக்கு பின் இதன் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில இடங்களில் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.  

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருவதால் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு தேர்தலுக்கு பின் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


;