tamilnadu

img

யெச்சூரி மீது பொய்வழக்கு.... நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் : எளமரம் கரீம்

புதுதில்லி:
தில்லி வன்முறை வெறியாட்டத்தை தூண்டிவிட்டதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பொருளாதார அறிஞர் பேரா.ஜெயதிகோஷ் உள்ளிட்டோர் மீது தில்லி காவல்துறை திட்டமிட்டு பொய் வழக்கு புனைந்திருப்பதைஎதிர்த்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவருவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர் 14) துவங்க உள்ள நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தனர். கட்சியின் நாடாளுமன்ற தலைவர் எளமரம் கரீம் கூறுகையில், ஒத்திவைப்பு தீர்மானம் இரு அவைகளிலும் கொணடுவரப்படும் என தெரிவித்தார். மேலும், கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் மோடி அரசின் அப்பட்டமான தோல்வி, பொருளாதார வீழ்ச்சி, அனைத்தும் கார்ப்பரேட் மயம், பிஎம் கேர்ஸ் நிதி எனும் பெயரிலான ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவாக எழுப்புவார்கள் எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், கே.கே.ராஜேஷ், ஏ.எம்.ஆரிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;