tamilnadu

img

ஊரடங்கு எதிரொலி.... மன அமைதியிழந்த வாலிபர் நாக்கை வெட்டிக் கொண்டார்

பலான்பூர்
இந்தியாவில் கொரோனா வைரஸ்  பரவலால் வெளிமாநிலத்திற்கு புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்பப் பணிகளில் சிலர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களில் ஒருவர் விவேக் ஷர்மா (24). இவர் மத்திய பிரதேச மாநிலம் மொரோனா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  இவர் கடந்த சனிக்கிழமை சுய்காம் தெஹ்ஸில், நடேஸ்வரி கிராமத்தில் உள்ள நடேஸ்வரி மாதாஜி கோவிலில் நாக்கை அறுத்து கையில் வைத்துக் கொண்டு மயக்கமடைந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு சுய்காம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கொரோனா தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஷர்மா  வீடற்றவராகிவிட்டார். மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைசெய்யப்பட்டதாலும் அவர் அமைதியிழந்து காணப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விவேக் தன்னுடைய நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டு அறுத்ததாகவும் தகவலை அப்பகுதி மக்கள் கசியவிட்டுள்ளனர். தெய்வத்தை திருப்திபடுத்த விவேகஷர்மா நாக்கை வெட்டிக் கொண்டதாகக் கூறினாலும் காவல்துறையினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர்.

;