tamilnadu

img

உச்சநீதிமன்றத்தில் வழக்கு காந்தி நகரில் பிளாட் இருப்பதை பிரதமர் மோடி மறைத்தாரா?

புதுதில்லி, ஏப்.18- பிரதமர் மோடி, அவரது வேட்புமனுவில், சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் மறைத்து விட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்திரிகையாளரும், சந்தை ஆலோசகருமான சகேட் கோகலே என்பவர், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“பிரதமர் மோடி, கடந்த 2007-ஆம் ஆண்டுதேர்தலில் போட்டியிடும் போது, சொத்து விவரங்களை வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், குஜராத்தின் காந்தி நகரில், தனக்குபிளாட் (வீட்டுமனை) இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 2006 வேட்புமனுத் தாக்கலிலும், இந்தபிளாட் காட்டப்பட்டுள்ளது. மோடி உட்பட 4 பேருக்கு, அந்த பிளாட்டில் பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 2012 மற்றும் 2014 தேர்தல்களில் இந்த சொத்து விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தொடர்ந்து மோடியின் பெயரிலேயே அந்த பிளாட் இருப்பது, ஆவணங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது.இதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, “மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நில ஒதுக்கீட்டின் அடிப்படையில், குஜராத் அரசுதான் இந்த பிளாட்டை அவருக்கு ஒதுக்கியது” என்று பாஜக-வினர் கூறுகின்றனர். ஆனால், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, யாருக்கும் அரசு நிலம் ஒதுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு தெரிவிக்கிறது.எனவே, மோடி தனது சொத்து விவரத்தை மறைத்திருக்கிறார் என்பது உறுதியாவதால், இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்.”இவ்வாறு சகேட் கோகலே கூறியுள்ளார்.

;