tamilnadu

img

நாட்டின் வளர்ச்சி நிச்சயமற்றதாகவே உள்ளது!

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற் கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கி இருந்தாலும், பொருளாதாரத்தின் நடுத்தர கால பார்வை நிச்சயமற்றதாகவே உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’, தனது 7-வதுவங்கி மற்றும் பொருளாதாரக் கூட்டத்தை (SBI 7th Banking & Economics Conclave)ஆன்லைனில் நடத்தியது.இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கலந்து கொண்டு, ‘வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம்’ என்ற தலைப்பில் பேசியிருப்பதாவது:

“கோவிட் -19 நெருக்கடி என்பது கடந்த100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். இது யாரும் எதிர்பாராத அளவுக்கு பொருளாதார உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும்நல்வாழ்வில், இதற்கு முன்னர் இல்லாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் இருக்கும் நிறுவனங் கள், தொழிலாளர் மற்றும் மூலதனத்தின் இயக்கத்தை முடக்கி, உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு இருக்கிறது.  இந்தியாவின் பொருளாதாரம், நிதி அமைப்பைசோதிக்கும் மிகப் பெரிய பரிட்சையாகவும் இது இருக்கிறது.இந்நிலையில், நமது பொருளாதார அமைப்பைப் பாதுகாக்கவும், தற்போதைய நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்கவும் இந்திய ரிசர்வ் வங்கி பலநடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரூ. 59 லட்சத்து 57 ஆயிரம் கோடி மதிப்புள்ள பணப்புழக்க நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டில்நாட்டின் பெயரளவிலான மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.7 சதவிகிதத்திற்கு சமம்.

கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், இந்திய பொருளாதாரம்  இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டத்தொடங்கியுள்ளது என்றாலும், பொருளாதாரத்தின் நடுத்தர கால பார்வை நிச்சயமற்றதாகவே உள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸ் காரணமாக தேவை மற்றும் வழங் கல்களில் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

மிக முக்கியமாக கொரோனா வைரஸ்பிரச்சனையால் வங்கிகளில் செயல்படாத கடன் (Non Performing Asset- NPA)அதிகரிக்கும் நிலை உள்ளது. இது மூலதனஅரிப்புக்கும் (Capital Erosion) வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி ஸ்திரத் தன்மைக்கும் ரிசர்வ் வங்கிசம முன்னுரிமை வழங்குவது முக்கியமானது. அதற்கேற்பவே வளர்ந்து வரும் அபாயங்களை அடையாளம் காண ரிசர்வ் வங்கிஅதன் ஆப்சைட் கண்காணிப்பு முறையை பலப்படுத்தியுள்ளது.இவ்வாறு சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார்.

;