tamilnadu

img

57.06 சதவீத வாக்குப்பதிவு

தில்லி மாநில சட்டமன்றத் தேர்தல்

புதுதில்லி,பிப்.8-  தில்லி மாநில சட்டமன்றத் தேர்த லில் 57.06 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளது. இது கடந்த தேர்தலை விட குறைவாகும். 70 தொகுதிகளை கொண்டுள்ள தில்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 8 சனிக்கிழமை யன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. கடும் பனி காரணமாக வாக்குப்பதிவு மந்தநிலையில் இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி ஒற்றை இலக்க சதவீதத்திலேயே ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவானது. மதியத்துக்கு மேல் வாக்குப்பதிவு அதிகரிக்க தொடங்கியது. 3 மணி நிலவரப்படி 30.18 சதவீதமும், 4 மணிக்கு 42.70 சதவீத வாக்கும் பதி வாகியிருந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதன் பிறகு வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுக் கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர், மாலை 6.30 மணி நில வரப்படி 57.06 சதவீத வாக்குகள் பதி வாகியுள்ளது. இது கடந்த சட்ட மன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது குறைவாகும். கடந்த 2015 சட்ட மன்றத் தேர்தலில் 67.12 சதவீத வாக்கு கள் பதிவாகியிருந்தது. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தனது குடும்பத்தினருடன் வாக் குச்சாவடிக்கு சென்று வாக்களித் தார். சஞ்சார் பவன் பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிர காஷ் காரத் வாக்களித்தார். 

துப்பாக்கிச்சூடு

தில்லியில் ஜாபர்பாத் பகுதியில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அங்கிருந்த ஆயத்த ஆடைகள் கடையை நோக்கி துப் பாக்கியால் சுட்டனர்.  வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ர வரி 11 ஆம்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பு தகவல்

தில்லி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதி வாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலில் அதாவது 2015 தேர்தலில் 67.12 சதவீதமாக இருந்தது. தில்லி சட்டமன்ற தேர்தலில், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன.இந்த தேர்தலில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதி களை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவு கள் வெளியாகி உள்ளது. அதன்படி அனைத்து கருத்திக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 44 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்று மென்றும், பா.ஜ.க 26 தொகுதிகளை கைப்பற்று மென்றும் கூறுகிறது. நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 50 - 56 இடங்களை கைப்பற்றும் என்றும் பா.ஜ.க 10 - 14 இடங்களை கைப்பற்றுமென்றும், காங்கி ரஸ் ஒரு இடத்திலும் வெல்லாது என தெரி வித்துள்ளது.

ரிபப்ளிக் -ஜான் கி பாத் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 48 -61 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 9 -21 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 0- 1 தொகுதியில் வெல்லும் என்றும் கூறுகிறது.

கடந்த தேர்தல்

கடந்த தேர்தலில் பெரும்பாலான தேர்த லுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஆம் ஆத்மி 3 - 50 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 20 - 33 தொகுதிகள் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 0 - 5 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கூறி இருந்தன. இவை அனைத்தையும் பொயாக்கும் வண்ணம், ஆம் ஆத்மி 54.3 சதவீத வாக்குகளு டன் 67 இடங்களில் வென்று இருந்தது. பாரதிய ஜனதா மூன்று இடங்களில் வென்று இருந் தது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து தொகுதி களிலும் தோல்வியையே தழுவியது.


 

;