tamilnadu

img

தில்லியின் எல்லைகள் மூடப்படும்.... முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

அடுத்த ஒரு வாரத்திற்கு தில்லியின் எல்லைகள் மூடப்படும் என தில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் அறி வித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறி யுள்ளார். மீண்டும் தில்லி எல்லைகளில் கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து அடுத்த ஒரு வாரத்திற்கு பிறகு முடிவுசெய்யப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். எல்லை கள் திறப்பது தொடர்பாக தில்லி வாசிகளின் ஆலோச னைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்கள் அளிப்பதில் தாமதத்துக்கு நோட்டீஸ்
தில்லி எய்ம்ஸ், சஃப்தர்ஜங், ராம் மனோகர் லோஹியா, லோக்நாயக், பாபாசாஹேப் அம்பேத்கர், குரு தேஜ் பகதூர், ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் கோவிட்-19 மரணங்கள் குறித்து தகவல் அளிப்பதில் தாமதம் செய்ததாக குறிப்பிட்டுள்ள தில்லி அரசு, அதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

திருச்சி - நாகர்கோயில் ரயில்
திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து 276 பயணிகளுடன் நாகர்கோயிலுக்கு திங்களன்று காலையில் ரயில் புறப்பட்டது. முன்னதாக, தமிழக அரசின் வேண்டுகோளின்படி தமிழகத்துக்குள் திங்களன்று முதல் (ஜூன் 1) 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

;