tamilnadu

img

தில்லியில் பலி 10 ஆக அதிகரிப்பு

சிஏஏவிற்கு எதிராக போராடுவோர் மீது  ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்கள் வெறியாட்டம்

புதுதில்லி, பிப்.25-  மக்களை பிளவுபடுத்தும் வகை யில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு(சிஏஏ) எதிராக தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறிக் கும் பல்கள் நடத்திய தாக்குதல் மற்றும் மோதலில் பலியானோர் எண் ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு போலீஸ்காரரும் அடங்கு வார். வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ரா பாத், மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட் டத்துக்கு (சிஏஏ) எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது இச்சட்டத்தை ஆதரித்து ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் பேரணி நடத்தி, எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் தலை மைக் காவலர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.  இந்நிலையில் இதில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை தற்போது 10 ஆக அதி கரித்துள்ளது. இதுகுறித்து தில்லி ஜிடிபி மருத்து வமனை மருத்துவக் கண்காணிப்பா ளர் சுனில் குமார் கூறுகையில், இன்று (செவ்வாய்) 4 பேர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர். திங்களன்று 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந் துள்ளது என்றார். 

இந்நிலையில் செவ்வாயன்று தில்லி காவல்துறையின் செய்தி தொடர்பாளர் மந்தீப் ரந்த்வானா, மொத்தம் 10 பேர் பலியானதாக தெரி வித்தார்.

கூடுதல் போலீசாருக்கு உறுதி: கெஜ்ரிவால்

இந்த சம்பவம் தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித்ஷா தலை மையில் அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர், தில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்ற னர்.  இந்த கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்  கூறுகையில், வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். உள்துறை அமைச்சர் ஆலோச னைக்கு அழைப்பு விடுத்தார். இது நேர்மறையான ஒன்றாகும்.  தில்லி யில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவெ டுத்துள்ளோம். தற்போது, காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடு தல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எங்க ளுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

தில்லியில் மதவெறி ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்கள் கட்டவிழ்த்து விட்டுள்ள கொலைவெறியாட்டத்தை வன்மையாக கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி, தேசிய தலைநகரம் பதற்றத்தில் சிக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அதைப் பற்றி பிரதமரும், உள்துறை அமைச்சரும் வாய் திறக்க மறுப்ப தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

;