tamilnadu

img

ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் வேலை இழந்த இளைஞர்கள் எண்ணிக்கை 6 கோடி

புதுதில்லி:
கொரோனோ ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 முதல் 39 வயதுக்குட்பட்டஆறு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (சிஎம்இஇ) தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் 24 சதவீதமாக இருந்தது. முந்தைய வாரத்தில் இது 27 சதவீதமாக இருந்தது. நகர்ப்புற வேலையின்மை கிட்டத்தட்ட 28 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 22.3 சதவீதமாகவும் இருந்தது. இருப்பினும், வேலை இழப்பின் புள்ளிவிவரங்கள் கவலைக்குரியதாகவே உள்ளது. கடந்த மாதத்தில் 20 வயதை பூர்த்தி செய்த 2.7 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையிழந்தனர். 30 வயதில் 3.3 கோடி பேரும் உள்ளனர்.  என்று சிஎம்இஇ நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான மகேஷ் வியாஸ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இது கடுமையான நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த காலத்தில் தான் இளம் இந்தியா ஒரு பிரகாசமான எதிர்காலம் என்ற நம்பிக்கையில் தனது வாழ்க்கையை உருவாக்குகிறது. 

2019-20 ஆம் ஆண்டில் நாட்டில் 20 வயது முதல் 24 வயதுக்குட்பட்டோர்   மொத்த வேலைவாய்ப்பில் 8.5 சதவீதம் பேர் உள்ளனர். கொரோனா ஊரடங்குகளில் அந்த வேலைகளில் 11 சதவீதத்தை இழந்தனர். இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் தொழிலாளர் சந்தைகளில் நுழைந்துள்ளனர். இவர்களில் 3.4 கோடி பேர் கடந்த நிதியாண்டில் பணிபுரிந்து வந்தனர். ஏப்ரல் மாதத்தில் 2.1 கோடி பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
இளைஞர்களின் வேலையிழப்பு கடன் சுமையை உயர்த்துவதோடு வீட்டுச் சேமிப்பையும் பாதிக்கிறது. “இந்தக் காலத்தில் குடும்பங்கள் பணத்தை சேமிப்பார்கள் என்றாலும், இளம் வயதின ரின்வேலை இழப்பு வீடுகள் வாங்குவதை அல்லது நீடித்த நாட்கள் உழைக்கக் கூடிய பொருட்களை வாங்கமுடியாமல்  செய்துவிடுகிறது என்றார்.

;