ஏப்ரல் மாதத்தில் 2.1 கோடி பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.....
ஏப்ரல் மாதத்தில் 2.1 கோடி பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.....
1953 - அமெரிக்காவில் முதல் முப்பரிமாண தொலைக்காட்சி ஒளிபரப்பு பரிசோதிக்கப்பட்டது. முப்பதாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையான விண்வெளி ரோந்து(ஸ்பேஸ் பட்ரோல்) என்னும், 1950இலிருந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காயட்சித் தொடரின் 30 நிமிட அத்தியாயம் மட்டும் சோதனை முறையில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்பப்பட்டது.
1777 அமெரிக்கப் புரட்சிப் போரின்போது, சிபில் லூடிங்ட்டன் என்ற 16 வயதுப் பெண், இரவு முழுவதும் குதிரையில் பயணித்து, எதிரிகளின் (இங்கிலாந்துப்படைகள் தான்) வருகையை அறிவித்து, குடிப்படைகளை எச்சரிக்கை செய்தார். இதனால், அமெரிக்க விடுதலைப்போரின் நாயகியாக இவர் கொண்டாடப்படுகிறார்
1895 - உலகை முதன்முதலில் தனியாகச் சுற்றிவந்த ஜோஷுவா ஸ்லோகும், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனது ஸ்ப்ரே என்ற படகில், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து தொடங்கினார்.
961 - பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, கியூபாமீது அமெரிக்கா நடத்திய பன்றிகள் விரிகுடாத் தாக்குதல்முடிவுற்றது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த கியூபாவில், 19ஆம் நூற்றாண்டில் 1860களிலிருந்து தேசியவாத இயக்கங்கள் போர்களாக வெடித்தன