புதுதில்லி, மே3- தில்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்தில் புணிபுரிந்த ஓட்டுநருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொட ர்ந்து, அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயி ரத்தை நெருங்கியது. தில்லியில் உள்ள மயூர் விஹாரில் செயல்படும் சிஆர்பிஎப் முகாம் அலுவலகத்தில் உள்ள 122 வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.இதனால் அந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்தில் பணி புரியும் டிரைவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்தக் கட்டடம் சீல் வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரிந்து ஊழி யர் ஒருவருக்கு கொரோனா உறுதியான தால், அந்த கட்டடம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1,000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட மயூர் விஹார் பட்டாலியனில் இருந்து அதிக மானோர் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளது உள்துறை அமைச்சகத்தை கவலையடையச் செய்துள்ளதாக என்று உள் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.