tamilnadu

img

சிஏஏ பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது... உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு ஆணவம்

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.குடியுரிமைச் சட்டம் (CAA) என்பது சட்டப் பூர்வமானது; அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்பதோடு, நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயம் எனவும் நீட்டி முழங்கியுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல் களால் பாதிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர்31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு, கடந்த 2019 டிசம்பர்11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சட்டத்திருத் தம் (Citizenship (Amendment) Act, 2019)கொண்டு வந்தது. இந்தச் சட்டம் மிகக் கவனமாக, முஸ்லிம்களை மட்டும் பாரபட்சத்துடன் விலக்கி வைத்தது.இதனை எதிர்த்து, ஒருபுறம் நீண்ட- நெடியபோராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,மற்றொரு புறத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, காங்கிரஸ், முஸ்லீம் லீக், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட இந்தியாவில், மத அடிப்படையிலானபாகுபாட்டுடன் ஒரு சட்டத்தை இயற்ற முடியாது என்பதால், மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்குஎதிரானது; அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கோரியிருந்தனர்.கடந்த ஜனவரி 22 அன்று, இந்த வழக்கைவிசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது மறுத்து விட்டது.

எனினும்,வழக்கு தொடர்பாக மத்திய அரசு மார்ச் 18-ஆம்தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக,129 பக்கங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில்அமைச்சக இயக்குநர் பி.சி. ஜோஷி செவ்வாயன்று (மார்ச் 17) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:“குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பதுமுற்றிலும் சட்டப்பூர்வமானது; அரசியல
மைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. இது நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயம். இதுகுறித்து நீதிமன்றத்தின் முன்பு கேள்விகேட்க முடியாது. குடியுரிமை குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.அரசியலமைப்பின் 246ஆவது பிரிவின் 7-ஆவது பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்தவொரு விவகாரம் குறித்தும் சட்டங்களை உருவாக்குவதற்கான தனிப்பட்ட அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. இந்த பட்டியலில் குடியுரிமை 17ஆவது இடத்தில் உள்ளது.மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு குடிமகனின் தற்போதுள்ள எந்த உரிமைகளையும் பறிக்காது. இது மக்களின் சட்டப்பூர்வ, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற உரிமைகளைப் பாதிக்காது. இந்தச் சட்டம் எந்த இந்தியர்களுடனும் தொடர்பு கொண்டதல்ல. இது இந்தியர்களுக்குக் குடியுரிமையை வழங்கவோ, பறிக்கவோ செய்யவில்லை.” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;