tamilnadu

img

நாட்டின் கடன் 71 சதவிகிதம் அதிகரிப்பு... 53 லட்சம் கோடியிலிருந்து 91 லட்சம் கோடி ரூபாயானது

புதுதில்லி:
நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவின் கடன் 71 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின்பொதுச்செயலாளர் கவுரவ் வல்லப், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

நாட்டின் கடன் 2014 மார்ச் மாதம் ரூ. 53 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக இருந்தது. அதுதற்போது 91 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாயாகஉயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 37 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் அதிகரித்துள்ளது. இது71.36 சதவிகித அதிகரிப்பு ஆகும்.ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதாச் சாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவிகிதமாக முன்பு இருந்தது. இப்போது அது இருமடங்கு (10.3 சதவிகிதம்) உயர்ந்துள்ளது.தேநேரம் வருமானம் உயரவில்லை. வேலை வாய்ப்பு இல்லை. இப்படி கடன் உயர்ந்தால் எப்படி அந்த சுமையை தாங்கப்போகிறோம்? பாஜக அரசின் தோல்விக்காக இந்தியமக்கள் இந்தக் கடனை சுமக்க வேண்டுமா? பிரதமரும், நிதியமைச்சரும் இந்த கவலைக்கு வரும் பட்ஜெட்டில் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு கவுரவ் வல்லப் கூறியுள்ளார்.

;