tamilnadu

img

கொரோனா வைரஸ் தொற்று காற்றிலும் பரவ வாய்ப்பு.... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுதில்லி:
புதிய ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள ‘கொரோனா வைரஸ்’ தொற்று, காற்றின் மூலமாகவும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றானது,தும்மல், இருமல் ஆகியவற்றின்போது வெளிவரும் நீர்த்திவலைகளால் பரவுகிறது என்றாலும், ஏனைய வைரஸ்தொற்றுகளைப் போல காற்றில் அவ்வளவு வீரியத்துடன் பரவுவதில்லை என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், காற்றின்மூலம் பரவாது என்று அலட்சியத்துடன் இருந்துவிடக்கூடாது என்று, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization- WHO), வளர்ந்து வரும்நோய்கள் மற்றும் ஜூனோசிஸ் பிரிவுத்தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ்தெரிவித்துள்ளார்.

தும்மல், இருமலின்போது வெளிப்படும் நீர்த்திவலைகள், எந்தெந்தப் பரப்பில் எவ்வளவு காலம் வீரியத்துடன் இருக்கும்; எப்பொழுது செயலிழக்கும் என்பது அப்போதைய வெப்பம், ஈரப்பதம் மற்றும் பரப்பின் தன்மைஆகிய காரணிகளைப் பொறுத்து மாறுபடும்; அந்த வகையில், கொரோனா வைரஸ் காற்றிலும் குறிப்பிட்ட காலம்இருக்கும் என்று மரியா வான் கேர்கேவ் சுட்டிக்காட்டியுள்ளார். ‘N-95’வகை சுவாசக் கவசங்களை அணிவதே இதனைத் தடுப்பதற்கான வழி என்று அவர் கூறியுள்ளார்.

;