tamilnadu

img

கொரோனா தடுப்பை கேரளத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்....

மும்பை:
கொரோனாவை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு கேரளத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் படேல் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் முதல் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட அதே நாள்தான் கேரளாவிலும் முதல் நபருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை 70 நாட்கள் முடிவடைந்தும் கேரளாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் தான் உள்ளது. மேலும், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-க்கும் குறைவாகவே உள்ளது.ஆனால், மகாராஷ்டிராவிலோ வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி யுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு மாநிலத்தில் இதுவரை 1,390 பேர் பலியாகியுள்ளனர்.   

கொரோனா வைரசையும் அத னால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கேரளா கட்டுப்படுத்துவது போன்று மகாராஷ்டிர அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. இவ்வாறு சந்திரகாந்த் படேல் கூறியுள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை கள் தொடர்பாக, பாஜக ஆளும்கர்நாடக மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே. சுதாகர்,நேரடியாகவே கேரள சுகாதா ரத்துறை அமைச்சர் சைலஜாவிடம் ஆலோசனைகளை கேட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

;