tamilnadu

img

கொரோனா பாதிப்பு : இந்தியா - 724 : தமிழகம் - 35 பலியானோர் எண்ணிக்கை 17 ஆனது

புதுதில்லி,மார்ச் 27- இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694பேரில் இருந்து 720 பேராக அதிகரி த்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரில், கொரோனா பாதித்த 65 வயது நபர் உயிரிழ ந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 17 பேராக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 724 பேராக அதிகரித்துள்ளது.  இவர்களில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டவர் 47 பேர். 67 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 640 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. மகாராஷ்டிரத்தில் 129 பேரும், கேரளத்தில் 127 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் 55 பேரும், குஜராத்தில் 42 பேரும் கொரோனாவால் பாதிக்க ப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 40 பேரும், ராஜஸ்தானில் 39 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 பேராக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 பேராக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து தமிழகம் வந்த 24 வயது வாலிபர் திருச்சி கே.எ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையிலும், லண்ட னில் இருந்து வந்த 24 வயது வாலிபர், அவருடன் இருந்த 65 வயது பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 பேரில் இருந்து   35 பேராக அதிகரித்து ள்ளது.  மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்திய சமையல் கலை நிபுணர் அமெ.வில் பலி 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திய சமையல்கலை நிபுணரான பிளாய்ட் கார்டோஸ்(59) புதன்கிழமையன்று உயிரிழந்தார் என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.