tamilnadu

img

கொரோனா பரவல் கடவுளின் செயலாம்..... நிதியமைச்சரின் கண்டுபிடிப்பு-தலைவர்கள் விமர்சனம்

புதுதில்லி:
கொரோனா பரவல் கடவுளின் செயல் என்று கூறிய மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்தை அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.  

41-வது ஜிஎஸ்டி கூட்டம் சில நாட்களுக்கு முன்பு மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறைஏற்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.,தனது டிவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டின் பொருளாதாரம் 3 செயல்களால் அழிக்கப்பட்டது. முதலாவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டது. இரண்டாவதாக தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கையால் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மூன்றாவதாக கொரோனாபரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாகப் பயன்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்தது” என சாடியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், தொற்றுநோய் ஒரு ‘கடவுளின் செயல்’ என்றால், தொற்றுநோயைத் தாக்கும் முன் இந்தியா?  2017-18, 2018-19 மற்றும்2019-20 காலங்களில் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தை எவ்வாறு விவரிப்பது. “கடவுளின் தூதராக  நிதி அமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக  மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமியும் விமர்சித்துள்ளார்.

;