tamilnadu

img

இந்தியாவில் கொரோனா சோதனை முறை சரியில்லை... உலக சுகாதார அமைப்பு அறிவுரைகள் மீறல்

புதுதில்லி:
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா (COVID-19) பரிசோதனை முறைகள் சரியானதாகப் படவில்லை என்று உலகசுகாதார அமைப்பின் (WHO) அறிவுறுத் தல்களை முன்வைத்து விவாதங்கள் எழுந்துள்ளன.கொரோனா, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, முடிந்தவரை பரவலாக அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் ஆகும்.

“ஆனால், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் செய்தவர்களை மட்டுமே இந்தியா பரிசோதித்து வருகிறது, அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களை இரண்டு வாரதனிமைப்படுத்தல் செய்கிறது. 8 ஆயிரம்பேர்களை சோதிப்பதற்கான திறன் இருந்தபோதிலும், இந்தியா ஒரு நாளைக்கு சுமார்90 சோதனைகளை மட்டுமே நடத்துகிறது; இது சரியல்ல” என்று சர்வதேச ஊடகங்கள்,சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.“உலகில் கொரோனா வைரஸிற்கான மிகக் குறைந்த சோதனை விகிதங்களில் இந்தியா உள்ளது. தென்கொரியா 10 லட்சம்பேரில் 4 ஆயிரம் பேர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்துகிறது. இந்தியாவோ 10 லட்சம் பேருக்கு வெறும் 5 பேர்களைமட்டுமே சோதிக்கிறது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில், நாட்டின் உயர்மட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர் பலராம் பார்கவா, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.“இந்தியாவில் கொரோனா ஒரு சமூகநோயாக மாறவில்லை என்பதால், உலகசுகாதார அமைப்பின் எச்சரிக்கை, இந்தியாவிற்கு இப்போது தேவையில்லை” என்று கூறியுள்ளார். அனைவரையும் சோதித்துப் பார்த்தால், அது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித் துள்ளார்.

ஆனால், “இந்தியாவின் 1.3 பில்லியன்(130 கோடி) மக்களில் 400 மில்லியனுக்கும்(40 கோடி) அதிகமான மக்கள் நெரிசலான நகரங்களில் வாழ்கின்றனர், பலர் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் உள்ளனர்; எனவே, கொரோனா இந்தியாவில் சமூகம் சமூகமாக பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது; எனவே, இன்னும் விரிவான சோதனைமூலம் மட்டுமே அதை தெரிந்து கொள்ளமுடியும்” என்று கூறியுள்ளார், போபாலைச் சேர்ந்த உலக சுகாதார ஆராய்ச்சியாளர் டாக்டர் அனந்த் பன்.இந்தியாவில் தற்போது, 52 கொரோனாவைரஸ் சோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் குறுகிய சோதனையின் விளைவாக, கொரோனாவைரஸ் தாக்கம் கண்டறியப்படாமலேயே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். எனவே, இந்தியாவின் அரசாங்க புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு அங்கு அதிகமாக இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்தியா தனது மொத்த பட்ஜெட்டில்3.7 சதவிகிதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. அவ்வாறிருக்கையில், கொரோனா வைரஸ் தடுப்புக்கு எவ்வளவு தொகையை செலவிடும்? என்றுசந்தேகம் எழுப்பும் சுகாதார வல்லுநர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனை ஆகியவற்றில் தீவிரம் காட்டுவது ஒன்றே வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.

;