tamilnadu

img

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய அமைச்சர் தகவல்... தில்லி வன்முறையை மறைக்க பீதிகிளப்பல் என குற்றச்சாட்டு

புதுதில்லி:
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனாவைரஸ் நோய் பாதிப்புக்காக சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இந்தியாவில் தில்லி மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் ஹர்ஷ் வர்தன்புதனன்று தில்லி அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக  சந்தேகத்தின் பேரில், தயாராக இருக்க, தில்லியில் உள்ள அனைத்துமருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு கோரியுள்ளோம்.

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்குப்பின்னர் வீடு திரும்பினர். 21 இத்தாலிய நாட்டினரில் 16 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்  தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.ஆக்ராவில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முன்னர் பட்டியலிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியா வரும்அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஈரான் அரசு எங்கள் முயற்சிகளை ஆதரித்தால், அங்கேயும் ஒரு சோதனை ஆய்வகத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. இது ஒரு முழுமையான சோதனைக்கு  பிறகு ஈரானில் இருந்துகுடிமக்களை திரும்ப அழைத்து வர உதவும் என்று தெரிவித்தார். 

தில்லி வன்முறையை மறைக்க பீதிகிளப்பல் 
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பேட்டி குறித்து  மேற்கு வங்கமுதல்வர்  மம்தா பானர்ஜி கூறுகையில்,தில்லி வன்முறை சம்பவத்தை திசை திருப்பவே கொரோனா வைரஸ் குறித்தபீதியை மத்திய பாஜக அரசு கிளப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசுகையில், தில்லிவன்முறையில் உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது யாருக்கும்தெரியாது. உண்மையான கொரோனா வைரசை ( தில்லி வன்முறை ) மக்கள்மறக்கச் செய்ய, அவர்கள் டி.வி. சேனல்களை பயன்படுத்தி கொரோனா வைரசை சுற்றி ஒரு மிகைப்படுத்தலை உருவாக்குகிறார்கள்.மேற்கு வங்கத்தில் ஒரு நபர் எலி கடித்தால் அவர்கள் சிபிஐ  விசாரணைகோருகிறார்கள். இவ்வளவு பேர் கொலை செய்யப்பட்ட பின்னரும் இங்கு நீதி விசாரணை இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

;