இந்திய அளவில் அனைத்து மருத்துவமனைகளிலும் ரத்த இழப்பு மிக குறைந்த அளவில் இருப்பதால் தன்னார்வ ரத்த கொடையாளர்களின் பங்கு, என்றும் போல இந்த கொடிய தொற்று வைரஸ் காலகட்டத்திலும் உள்ளது. முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு கூட ரத்தம் இல்லாத நிலையின் காரணமாக சிகிச்சை தள்ளிப் போகும் சூழ்நிலை உள்ளது.
மொபைல், நடமாடும் ரத்தம் சேகரிக்கும் வாகனங்களை பயன்படுத்தி ரத்தக் கொடையாளர்களிடம் குறுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தாயின் கண்ணீர் குழந்தையைக் காப்பாற்றுவது இல்லை. ஒருவரின் ரத்தம் மட்டுமே குழந்தையை காப்பாற்றும். ரத்தத்தை உற்பத்தி செய்ய எந்த தொழிற்சாலையும் இல்லை. மனிதர்களும் ரத்ததான கொடையின் மூலமும் அது முடியும்.
நமது நாட்டில் ஒரு ஆண்டிற்கு தேவை நான்கு கோடி யூனிட் ரத்தம். ஆனால் ரத்த தானத்தின் மூலம் பெறுவது 40 லட்சம் யூனிட் மட்டுமே. ஒருவர் அளிக்கும் 350 மில்லி ரத்தம் நான்கு விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றும் திறன் கொண்டது.
தொடர்ந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் புரிவோருக்கு மாரடைப்பு நோய் வருவது குறைகிறது. உடலில் உள்ள ஒரு பகுதி ரத்தம் இயற்கையாகவே அழிவடைந்து வருகிறது. பயனற்றுப் போகும். ரத்தத்தை சக மனிதர்களுக்கு அளித்து உதவலாம்.
கடந்த 26 வருட காலமாக தொடர்ச்சியாக ரத்த தானம் வழங்கி வரும் கொடையாளர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் ஊழியர், டேபிள் டென்னிஸ் வீரர் பயிற்சியாளர் எத்திராஜனின் அனுபவத்தை சற்று பார்ப்போம்.
"ரத்ததானம் வழங்குவதால் சக்தி குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது. அத்தகைய தவறான எண்ணத்தை உடைத்தெறியவே ரத்த தானம் செய்து வருகிறேன்". விளையாட்டு வீரர்கள் ரத்ததானம் செய்ய முன் வருவதை பார்த்து, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி அதிக அளவில் ரத்ததான செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே தொடர்ச்சியாக ரத்த தானம் வழங்கி வருகிறேன். 26 ஆண்டுகளாக தொடர்ந்து ரத்தம் வழங்கி வருகிறேன். கண் தானத்துக்கு பதிவு செய்துள்ளேன்"என்றார்.
அவசர காலத்திலும் அசாதாரணமான சூழ்நிலை யிலும் நாட்டு மக்களுக்கு ரத்த தானம் என்பது மிக மிக அவசியமான தேவை என்பதால் அனைவரும் மனம் உணர்ந்து ரத்த தானம் செய்வோம்.விலை மதிப்பில்லா மனித உயிர்களை காப்பாற்றுவோம் என்கிறார் அவர்.