tamilnadu

img

தொடரும் புறக்கணிப்பு!

மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

புதுதில்லி, பிப்.1- மத்திய பட்ஜெட்டில் ஊனமுற்றோர் புறக் கணிக்கப்படுவது தொடர்கிறது என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பட்ஜெட் குறித்து தன்னுடைய முழுமையான அதிருப்தியை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வெளிப் படுத்திக்கொள்கிறது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிதியமைச்சர், முதியோருடன் இணைத்து ஓரிடத்தில் ஊன முற்றோர் குறித்துக் குறிப்பிட்டிருப்பது மட்டுமே காணப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரையில் ஊனமுற்றோர் குறித்து அதிகம் கவலைப்பட்டதுபோன்று இந்த அரசு காட்டியிருந்தபோதிலும், பட்ஜெட் உரையில் அதற்கான ஒதுக்கீடு என்பது அநேகமாக இல்லை.   2016 ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தில் கண்டுள்ள பல்வேறு ஷரத்துக் களை அமல்படுத்துவதற்கான ஒதுக்கீடுகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 1995 ஊன முற்றோர் சட்டம் அமலாக்கத்திற்கான திட்டத்திற்கான ஒதுக்கீடும் குறைக்கப் பட்டிருக்கிறது.  

ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத் தொகை தற்போது மாதத்திற்கு 300 ரூபாய் என்று இருப்பதை உயர்த்திடக்கூடிய விதத்தில் எவ்வித அறிவிப்பும் இல்லை. நாட்டில் தற்கொலை செய்துகொள்ப வர்கள் எண்ணிக்கையும், மனநலம் பாதித் தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனினும் இதனைக் கட்டுப் படுத்தக்கூடிய விதத்தில் தேசிய மனநலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் கணிச மான உயர்வினை ஏற்படுத்திட மத்திய பட்ஜெட் மறுத்திருக்கிறது. உண்மையில் பெங்களூரில் இயங்கிவரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் & நீரோசயின்சஸ் மற்றும் தேஜ்பூரில் இயங்கி வரும் லோக்பிரியா கோபிநாத் பர்தோலி ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ரயில்வே உட்பட பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் அறிவிப்புகள் ஊனமுற்றோரைக் கடுமை யாகப் பாதித்திடும். இவ்வாறாக ஊன முற்றோர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டி ருப்பதற்கு எதிராக ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தன் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறது என்று கூறியுள்ளார்.             (ந.நி.)

;