tamilnadu

img

திட்டமிட்டு சிதைக்கப்படும் அரசியல் சாசன அமைப்புக்கள்... தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வேதனை

புதுதில்லி:
நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அரசியல் சாசன பொறுப்பை வகிக்கும் அனைத்து அமைப்புக்களும் திட்டமிட்டு சிதைக்கப்படுவதாக தில்லி உயர் நீதிமன் றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்தரங்கம் ஒன்றில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:ஒரு முன்னாள் நீதிபதியாக, குறைந்தபட்சம் சில எச்சரிக்கை மணிகளை ஒலிப்பதுஎன் கடமை என்று நான் நம்புகிறேன். எங்களிடம் ஒரு தாராளவாத ஜனநாயகமதச்சார்பற்ற குடியரசு உள்ளது நீண்டகாலமாக ஒரு பெருமை என் போன்றோரிடம் இருந்தது. நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு, மாநில சட்டமன்றங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிர்வகிக்க நீதித்துறை, தணிக்கையாளர் ஜெனரல், தேர்தல் ஆணையம், மனித உரிமை கண்காணிப்புக் குழு, ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், பத்திரிகைகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகம் வலுவான பற்சக்கரங்கள் மூலம் இந்தியகுடியரசு இயங்குகிறது என்ற நம்பிக்கைதான்.

ஆனால், இன்று அவையெல்லாம் வெறும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக மாறிவிட்டது.இந்த அழிவு 2014-இல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது தொடங்கியது. கடந்தகாலங்களில் இந்திரா காந்தி அரசாங்கம் மேற்கொண்ட அப்பட்டமான அழிவுடன் இதை ஒப்பிடும் ஒரு சலனமும் உள்ளது. ஆனால் ஒப்பீடுகள் மோசமானவை. ஏனெனில் அப்போது நீதிமன்றம் ஆட்சியாளர் களை கேள்விகேட்க முடிந்தது.ஆனால், இன்று நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு இன்றுஅனைத்து அதிகாரமும் ஒரு நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் மேலாக கவலைக் குரிய நிலையில் இருப்பது நீதித்துறை. இன்று விவாதிக்கப்பட வேண்டிய பலமுக்கியமான பிரச்சனைகள் அதனிடம் உள்ளன. நாடாளுமன்றம் பலவீனமடைந்துள்ள நிலையில், காஷ்மீர் துண்டிக்கப்படுதல், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை, இந்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குதல் மற்றும் போராட்டக்காரர்களை குற்றவாளியாக்குதல், தேசத்துரோகம் போன்ற கடுமையான சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதசெயல்பாடுகள் பற்றி விவாதிக்க உச்ச நீதிமன்றம் அடுத்த சிறந்த இடமாக இருந்திருக்கும். நீதிபதிகள் தவறான அரசாங்கத்தைக் கண்டறியும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் என்று அரசியல் சிந்தனையாளரான எட்மண்ட் பர்க் கூறினார்.

அதற்கேற்பவே நீதிமன்றம் தன்னை அரசியலமைப்பின் “தர்க்கரீதியான, முதன்மை பாதுகாவலர்” என்றும் “அதன் மொழிபெயர்ப்பாளர் மற்றும் பாதுகாவலர்” என்றும் பலமுறை நிறுவியுள்ளது. ஆனால் தற்போது அது நடக்கவில்லை.உச்சநீதிமன்றத்தின் இன்றைய குளறுபடிகள், தற்செயலானவை அல்ல. இதுவொரு திட்டமிட்ட அரசியல் செயல்பாடாகவே தோன்றுகிறது. இதற்கு அரசுதான் காரணம் என்பதும் வெளிப்படையாகத் தெரியும் ரகசியம். அதை அரசு அதிகாரம் எப்படிசெய்கிறது என்பதையும் நம்மால் காண முடிகிறது. நீதிமன்றத்தைக்  கைப்பற்றுவதற்கு, அரசுக்கு ஆதரவான நீதிபதிகளைக் கண்டெடுத்து, அவர்களையே நியமிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. அதுகடினமான காரியமும்கூட.அரசுக்கு ஆதரவான ஒரு தலைமை நீதிபதியோ அல்லது குறிப்பிட்ட சில நீதிபதிகளோ, அரசுக்கு தேவையானதை செய்துவிட முடியும். இதுதான் தற்போது இந்தியாவில் நடந்துகொண்டுள்ளது. சுதந்திரமாக செயல்படும் திறமையுள்ள நீதிபதிகள் முக்கிய விஷயங்களிலிருந்து திட்டமிட்டுப் புறந்தள்ளப்படுகிறார்கள்.உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதிகளாக பதவி வகித்த கடைசி 3 தலைமை நீதிபதிகளும், பின்னர் அரசுஅதிகாரத்திற்குள் எப்படி உள்ளிழுக்கப் பட்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.”இவ்வாறு ஏ.பி. ஷா பேசியுள்ளார்.

;