tamilnadu

img

முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த சூழ்ச்சி

மத்திய பாஜக அரசு மீது பிருந்தாகாரத் குற்றச்சாட்டு

சென்னை.அக்.13- தேசிய குடிமக்கள் சட்டத்திருத்தத் தின் மூலமாக முஸ்லீம் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த  பாஜக அரசு முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் குற்றம்சாட்டினார். சென்னையில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சனிக்கிழமை (அக்.12)  நடைபெற்ற “காஷ்மீர் - அரசி யலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’’ என்ற  கண்டன கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு: 

அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக சூழலில் காஷ்மீர் பிரச்ச னையை நாம் அணுகவேண்டியுள்ளது. மக்களில் ஒரு பிரிவினருக்கு ஜனநா யகம் மறுக்கப்படும்போது அதற்கு எதி ரான குரல்களும் ஜனநாயக வடி விலேயே எதிரொலிக்கும். காஷ்மீர் மாநி லத்தில் இதற்கான முதல் பாடத்தை கற்றுக்கொண்டோம். இந்தியாவில் ஒரு பிரிவு மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை பறிக்க மோடி அரசு எடுத்த முயற்சிதான் அந்த மாநிலத்திற் கான சிறப்பு அந்தஸ்து பறிப்பு. ஒரு பிரிவு மக்களுக்கான உரிமைகளை பறித்து  ஜனநாயகத்தை பிளவு படுத்தி விடலாம் என்று மோடி அரசு கருதுகிறது. ஆனால் இந்திய குடிமக்க ளாகிய நாம் அவ்வாறு நடைபெற அனு மதிக்கமுடியாது என்று உரத்த குரலில் சொல்லவேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சிறையில் இருக்கும் வரை அந்த மாநிலத்தில் இயல்பு நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை. துண்டிக்கப் பட்ட தகவல் தொடர்பு வசதிகளை வழங்காதவரை, அரசியல் கட்சிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படாத வரை அம் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பாது. இயல்பு நிலை திரும்பி விட்டதாக மத்திய அரசு கூறுவது வடி கட்டிய பொய்யைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. இயல்புநிலை இல்லாத போது பஞ்சாயத்து தேர்தலை நடத்து வதில் ஆளுநர் தலைமையிலான மாநில நிர்வாகம் தீவிரம் காட்டுகிறது. இதன் மூலம் அந்த அமைப்புகளை குறுக்குவழியில் கைப்பற்ற பாஜக முயற்சிப்பது வெட்டவெளிச்சமாகி யுள்ளது. எனவேதான் மாநிலத்தில் இயல்புநிலை நிலவுகிறது என்று வெளியே மத்தியஅரசு தொடர்ந்து பொய்யை சொல்லிவருகிறது. இதேபோல் இன்று  மற்றொறு பிரச்ச னையை மத்திய அரசு  ஏற்படுத்தி யுள்ளது. அது, யார் இந்தியர்கள் என்பதுதான். இந்தியாவில் பிறந்த எவர் ஒருவரும் இந்தியர்களே என்று நமது அரசியல் சாசனம் கூறுகிறது. யார் யாரெல்லாம் இந்திய குடிமக்களாக இருக்கலாம் என்பதை முடிவு செய்ய ஆர்எஸ்எஸ் பாஜக சங்பரிவாரின் சதித் திட்டத்தில் உருவானதே  குடி மக்கள் திருத்தச்சட்டமாகும். இந்திய மக்கள் அனைவருக்கும் உள்ள சம மான உரிமையை ஒருதரப்பு மக்க ளுக்கு மறுக்கமுயற்சிக்கிறார்கள். இதன் மூலம் முஸ்லீம் மக்களை இரண் டாம்தர குடிமக்களாக நடத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இது இந்தியா வின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து விடும். பாஜக அரசின் இத்தகைய கொள் கைகளை  மக்களை திரட்டி முறியடிப் போம். இவ்வாறு அவர் பேசினார்.

;