tamilnadu

img

சந்திரயான்-2 மிகப்பெரிய சாதனை

நாசா முன்னாள் விஞ்ஞானி பேட்டி


நாகர்கோவில், செப்.1- நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் மிகப்பெரிய சாதனை என்று நாசா முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ.தாமஸ் கூறினார்.  அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி யும் முன்னாள் விண்வெளி வீரருமான டொனால்ட் ஏ.தாமஸ் இந்தியா வந்துள்ளார். அவர் சனியன்று நாகர்கோவிலில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அதையொட்டி அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம் மிகப்பெரிய சாதனையாகும். இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் தரு ணத்தை நாசா உன்னிப்பாகவும் ஆர்வமாகவும் கவனித்து வருகிறது.இன்னும் 5 ஆண்டுகளில் நாசா நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனால் சந்திர யான்-2 நிலவில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் அனைத்தும் மிக முக்கியமானது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் நாசா விண்வெளியில் சுற்றுலா தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின்கீழ் பயணித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

;