tamilnadu

img

ராமர் கோவிலுக்கு வருமான வரி விலக்கு... மத்திய நிதியமைச்சகம் ‘முக்கிய’ அறிவிப்பு

புதுதில்லி:
கோரோனா களேபரங்களுக்கு இடையே, அயோத்தியில் கட்டப்படும் ராமர்கோயிலுக்கு 80ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளித்து, மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா தீவிரத்திற்கு இடையிலும், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் அண் மையில் துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “வருமான வரி விதிகள் 1961 பிரிவு80 ஜி-யின் கீழ் மத்திய அரசு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ராவுக்கு வருமானவரி விலக்கு அளித்துள்ளது” என குறிப் பிட்டுள்ளது.மேலும் இந்தக் கோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் பொதுமக்களின் பிரார்த்தனை தலம் என்பதால் இந்தவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

;