tamilnadu

img

சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா?

ஜெய்ப்பூர்:
சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்ற சர்ச்சை இராஜஸ்தான் மாநிலத்தில் வெடித் துள்ளது.தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத் தில் அதிமுக கொறடா உத்தரவை மீறி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது சபாநாயகர் தனபால் தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் 2018 ஏப்ரல் 27ஆம் தேதி அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு அளித்த தீர்ப்பில், “சபாநாயகர் ஏதும் உத்தரவிடாத நிலையில் நீதிமன்றம் தலையிடமுடியாது. தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகவே சபாநாயகர் முடிவெடுக்கும் முன்பே நீதிமன்றத்தை மனுதாரர் அணுகியது தவறு. ஆகவே வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்” எனக் குறிப்பிட்டு தீர்ப்பளித்தனர்.

இதே வாதத்தை தற்போது இராஜஸ்தான் அரசியல் நெருக்கடி விவகார த்தில் மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சந்திரபிர காஷ் ஜோஷி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முன்வைத்துள்ளார்.இராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்துக்கு கொறடா உத்தரவிட்டும் வராததால், ஏன் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என அவர்களுக்கு அம்மாநிலசபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந் தார். இதை எதிர்த்து பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இந்த மனு திங்களன்று (ஜூலை 20) ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜஸ்தான் சபாநாயகர் சார்பாக இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ஒருமுடிவு எடுக்காத நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. 2016ஆம் ஆண்டு உத்தர்கண்ட் மாநில சட்டமன்ற சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 19 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் பற்றி சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். சபாநாயகரின் செயல்படுத்தும் அதிகாரத்தில் தலையிட நீதித் துறைக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை. அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே இப்போதைக்கு இந்த வழக்குதேவையே இல்லை” என்று வாதாடினார்.

ஒரு வேளை இந்த வழக்கில் தனக்குஎதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், சபாநாயகரின் முடிவை தாமதப்படுத்து வதற்காக உச்ச நீதிமன்றம் செல்லும் முடிவில் சச்சின் பைலட் இருப்பதாக கூறப்படுகிறது.

;