tamilnadu

img

ஆர்எஸ்எஸ் முகாமில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு...

கூத்துப்பரம்பு:
கைதேரி தேன்புளியில் உள்ள ஆர்எஸ்எஸ் முகாமில் உயர் சக்தி கொண்ட வெடி குண்டு கண்டுபிடிக்கப் பட்டது.ஆர்எஸ்எஸ்காரர்கள் வழக்கமாக கூடும் பீற்றுக் குண்டு பாலத்தின் அருகில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  வெடிகுண்டு கையாள  பயன்படும் எவர்சில்வர் பாத்திரம் ஒன்றும்  மீட்கப்பட்டது. செவ்வாயன்று காலை  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் கூட்டாக சோதனை நடத்தினர்.

இப்பகுதியில் இரவில் வழக்கமாக குண்டுவெடிப்பதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் ஆயித்தர மம்பரம், கைதேரிபகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்கப்பட்ட வெடிகுண்டு பின்னர் செயலிழக்கப்பட்டது. வரும் நாட்களில் அப்பகுதியில் ஆய்வுதொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.