நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர். இந்லையில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.