tamilnadu

img

வலைப்பதிவு... எர்னஸ்ட் தேல்மன் கொல்லப்பட்ட நாள்...

76 ஆண்டுகளுக்கு முன்பு1944ம் ஆண்டு ஆகஸ்டு18ம் தேதி ஜெர்மனி கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தானதலைவரான எர்னஸ்ட் தேல்மன், ஹிட்லரின் ஆணையின் படி ஒரு வதைமுகாமில் நாஜிக்களால் கொல்லப்பட்டார். அவரது துணிச்சலும் பாரம்பரியமும் புகழும் நீடித்து நிலைக்கும்.

மார்க்சிஸ்ட் கட்சி / பாண்டிசேரி

-------------------------------------------------------------

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுவது குறித்து  இந்திய வெளியுறவு அமைச்சகம்: “அயல் நாடுகளின் அரசியல் பிரச்சனைகளில் நாங்கள் கருத்து சொல்வது இல்லை” பேராசிரியர் விபின் நரங் அவர்களின் பதில் பதிவு: ஹவுடி மோடி நிகழ்ச்சியில் “மீண்டும் ஒரு முறை டிரம்ப் சர்க்கார்” என ஒருவர் பேசியது எதில் சேர்த்தி?

பத்திரிக்கையாளர்  சுஹாசினி ஹைதர்

----------------------------------------------------------------------

முகநூல் – பா.ஜ.க. கள்ள உறவு பற்றி எத்தனை காட்சி ஊடகங்கள் விவாதிக்கின்றன?- பத்திரிக்கையாளர் பார்த். நியாயமான கேள்வி. முதல் கேள்வி- ஊடகங்களின் சுதந்திரம் எங்கே போயிற்று? இரண்டாவது கேள்வி-பெரும்பாலான ஊடகங்களின் முதலாளிகள் யார்? 3வது கேள்வி- ஊடக முதலாளிகள் அரசியல் ரீதியாக யாருக்கு நெருக்கம்?பதில்கள் அனைவரும் அறிந்ததுதான்!

அஷோக் தவாலே, மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

------------------------------------------------------------------------------------------------

கடந்த 4.5 மாதங்களில் 5.5 கோடி குடும்பங்கள் 100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இதுவரலாறு காணாத உச்சம்.  இதற்கு முன்னால் 2011ம் ஆண்டு 5 கோடி குடும்பங்கள்பயன்படுத்தின; ஆனால் அது முழு ஆண்டுக்கு! 

இந்தியன் எக்ஸ்பிரஸ் துணை ஆசிரியர் சுஷாந்த் சிங்

------------------------------------------------------------------------------------------------------

கிராமப்புற வேலை உறுதித் திட்டப் பணி நாட்களை 200 ஆக உயர்த்த வில்லை எனில் கிராமப்புற நெருக்கடி ஆழமாகும்.

பேரா. ஜெயதி கோஷ்

--------------------------------------------

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தண்டனையை உத்தரவாதம் செய்த சங்பரிவாரத்தினர், இப்பொழுது, திரைப்பட கலைஞர் ஸ்வாரா பாஸ்கர், உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து  தெரிவித்த ஒரு கருத்தை முன்வைத்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு புகாரைஉச்சநீதிமன்றத்தில் அளித்துளனர்.

வயர் இதழ்

----------------------------------------

SEL Textiles Limited எனும் நிறுவனம் மீதும் அதன் இயக்குனர்கள் ராம் சரண் சலூஜா/ நீரஜ் சலூஜா/ தீரஜ் சலுஜா ஆகியோர்  10 வங்கிகளில் 1531 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தீரஜ் சலூஜா வெளிநாடு தப்பிவிட்டார். எந்த  தேசத்தில் உள்ளார் என தேடுகிறார்களாம்!

பத்திரிக்கையாளர்  அரவிந்த் குணசேகர்

========================

தொகுப்பு : அ.அன்வர் உசேன்

;