tamilnadu

img

அலிபாபா செயலிகளைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக... தேர்தல் வரவு- செலவுக் கணக்கில் உண்மை அம்பலம்

புதுதில்லி:
கடந்த மக்களவைத் தேர்தலில், சீன நிறுவனங்களின் ஒத்துழைப்போடுதான் பாஜக தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றதாக, சமூக வலைதள மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டஆர்வலர் சாஹேத் கோகலேஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
2019 தேர்தலின் போது ரூபாய் 325 கோடிக்கும் அதிகமான தொகையை தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையத் தளம் மற்றும் பிற வகைகளில் விளம்பரத்திற்காக செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக கணக்கு சமர்ப்பித் துள்ளது. அந்த செலவுக் கணக்கு களை அடிப்படையாக வைத்தேசாஹேத் கோகலே குற்றச்சாட் டுக்களை எழுப்பியுள்ளார்.இந்தியாவின் இறையாண் மைக்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படுகின்றன; இந்திய மக்களைப் பற்றிய தரவுகளை சீன ராணுவத்துடன் பகிர்கின்றன என்றகுற்றச்சாட்டுக்களைச் சுமத்தித்தான் அண்மையில் யுசி பிரவுசர், ஷேர் இட், டென்-செண்ட் ஆகிய சீன நிறுவனங்களின் செயலிகளுக்கு மோடி அரசு தடை விதித்தது.

ஆனால், அதே ஷேர் இட், யு.சி. பிரௌசர், டென்-சென்ட் ஆகிய செயலிகளைத்தான் தனது 2019 தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக ஒப்பந்தம் செய்திருந்தது. இதில், இணையதளம் வாயிலாக விளம்பரம்செய்வதற்கு சீனாவைச் சேர்ந்த‘அலிபாபா’ நிறுவனத்திற்கு சொந்தமான யு.சி. பிரவுசர், காமா கானா, டென்செண்ட் ஆகியநிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தையும் பாஜக அள்ளிக் கொடுத்துள்ளதாக சாஹேத் கோகலே தெரிவித் துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவே சீனாவுடன்மோதல் போக்கு கடைபிடிக் கப்படுவதாகவும், ஆனால் இதேசீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் டிரம்பின் வெற்றிக்காகஉழைத்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக அந்நாட்டில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில், டிரம்ப்பின் நண்பரான நரேந்திர மோடியும், 2019 தேர்தல் வெற்றிக்கு சீனநிறுவனங்களுடன்தான் கைகோர்த்து செயல்பட்டுள்ளார் என்று சாஹேத் கோகலே கூறியுள்ளார்.

;