tamilnadu

img

பாகிஸ்தான் ராணுவப் பாடலை காப்பியடித்த பாஜக எம்எல்ஏ

ஹைதராபாத், ஏப்.15-தெலுங்கானா மாநிலத்தின் கோசமஹால் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர், தாக்கூர் ராஜாசிங் லோத். பாஜகவைச் சேர்ந்தவர்ஆவார். இவர், இந்திய ராணுவத்திற்கு, தான் அர்ப்பணிக்கும் பாடல் என்று ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.ஆனால், லோத் வெளியிட்டுள்ள பாடல், தங்கள் ராணுவத்தின் பாடல் என்று பாகிஸ்தான் ராணுவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையிலும், பாகிஸ் தான் கூறுவதே உண்மை என்றும் நிரூபணமாகி இருக்கிறது.ராம நவமியை ஒட்டி, ராணுவத்திற்கான பாடலை வெளியிடுவதாக கூறிய எம்எல்ஏ லோத், சொன்னபடியே ஞாயிறன்று 11.45 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில்பாடலை வெளியிட்டுள்ளார். ஆனால்,அவர் வெளியிட்டது, சாஹிர் அலிபாகா என்பவர் எழுதி, பாகிஸ்தான் ராணுவம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி பாகிஸ்தான் தினத்தன்று வெளியிட்ட பாடல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்தபாடலில் பாகிஸ்தான் என்று வரும்இடங்களில் எல்லாம், இந்தியா என்று லோத் மாற்றியுள்ளார். அதைமட்டுமே லோத் செய்துள்ளார். மற்றபடி பாடலை முழுமையாக காப்பி அடித்துள்ளார்.இந்நிலையில், “நீங்கள் பாடலைக் காப்பி அடித்ததில் மகிழ்ச்சி.அதேபோல் உண்மை பேசுவதையும் காப்பி அடிக்கலாமே” என்று, பாஜக எம்எல்ஏ லோத்தை, பாகிஸ்தான் ராணுவத் தளபதி மேஜர் ஆசில் காபூர், ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் பாஜக கட்சியின் எம்எல்ஏ ஒருவர், இவ்வாறு பாகிஸ்தான் பாடலை திருடியது வெட்கமாக தெரியவில்லையா? என்று சமூக வலைத்தளவாசிகள் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

;