திருவனந்தபுரம்:
“கேரளத்தில் 90 சதவிகிதம் பேர் படித்தவர்கள்; நன்றாக சிந்திக்கக் கூடியவர்கள்; அதனால் தான் கேரளத்தில் பாஜக வளர முடியவில்லை” என்று கேரள சட்டமன்றத்தில் அந்தக் கட்சிக்கு இருக்கும் ஒரே எம்எல்ஏ-வான ஓ. ராஜகோபால் பேசியுள்ளார்.
“ஹரியானா, திரிபுரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சியடைந்த பாஜக-வால் கேரளாவில் வளர முடியாமல் போனது ஏன்?” என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (The Indian Express) ஏடு எழுப்பிய கேள்விக்கு ஓ. ராஜகோபால் பதிலளித்துள்ளார். அதில்தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.“கேரளா ஒரு வேறுபட்ட மாநிலம். இங்கு பாஜக வளராமல்இருப்பதற்கு 2, 3 தனித்துவமானகாரணங்கள் உள்ளன. கேரளாவில் 90 சதவிகித கல்வியறிவுஉள்ளது. அவர்கள் சிந்திக்கிறார் கள் விவாதப்பூர்வமாக இருக்கிறார்கள். இவை படித்த மக்களின் பண்புகள். பாஜகவுக்கு இது ஒரு பிரச்சனை. கேரளாவில் 55 சதவிகிதம் இந்துக்களும் 45 சதவிகிதம் சிறுபான்மையினரும் இருப்பது இந்த மாநிலத்திற்கு உள்ளமற்றொரு சிறப்பம்சம் என்றால்,அதுவே பாஜகவுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனையாக உள்ளது. ஒவ்வோர் அரசியல் கணக்கிலும் இந்த அம்சம் உள்ளே வருகிறது. இதனால்தான் பிற மாநிலங்களுடன் கேரளாவை ஒப்பிடமுடியாது. இங்கு சூழ்நிலையே வேறு. ஆனால் இங்கு நாங்கள்மெதுவாகவும் நிலையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறோம்” என்று ஓ. ராஜகோபால் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை பாராட்டித்தான் ஆக வேண்டும் என்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேட்டியில் ஓ. ராஜகோபால் கூறியுள்ளார்.“பினராயி விஜயனிடம் நல்ல நிர்வாகத் திறமை உள்ளது. அவர்திறமையானவர், புத்திசாலி, கொஞ் சம் பேசுகிறார். ஆனால் அவர் இலக்கை அடைகிறார். அதை நீங்கள் மறுக்க முடியாது. நாம் உண்மையை ஏற்க வேண்டும். நாம் வேண்டுமென்றே பொய் சொல்லக்கூடாது. அரசியல் என் றால் பொய்தான் பேச வேண்டும் என்பதில்லை. உண்மையைப் பேச வேண்டும். நேர்மை இருக்கவேண்டும். மிகுந்த ஏழ்மையான நிலையிலிருந்து இந்த இடத்திற்கு வந்திருப்பவர் பினராயி விஜயன். அவர் ஒரு குறுநடை போடும் மகனின் மகன். அவர்மிகவும் மோசமான சூழ்நிலையிலிருந்து வந்திருக்கிறார். அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்” என்று ஓ.ராஜகோபால் குறிப்பிட்டுள்ளார்.