tamilnadu

img

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் தள்ளிப்போன தீர்ப்பு...!

3 ஆவது முறையாக காலநீட்டிப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மே 9- பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள் ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 31 வரை நீட்டித் துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு, இந்துத்துவா வெறிக்கும்பலால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த வன்முறையில் 2 ஆயிரத்திற்கும் அதி கமானோர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு, பாஜக மூத்தத் தலை வர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்த ரப்பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீதான குற்றச் சாட்டுக்கள் ரேபரேலி நீதிமன்றத்தி லும், கரசேவகர்கள் என்ற பெயரில் மசூதி இடிப்பில் ஈடுபட்ட மதவெறிக்கும்பல் மீதான வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும் விசா ரிக்கப்பட்டு வந்தன. இதில், ரேபரேலி நீதிமன்றம், 2001-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி உள்ளிட்ட 21 தலை வர்களையும் வழக்கிலிருந்து விடுவித்தது. 2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதி மன்றமும் ரேபரேலி நீதிமன்றத் தீர்ப்பை உறு திப்படுத்தி அதிர்ச்சி அளித்தது.

ஆனால், மத்திய புலனாய்வுக் கழகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், “தொழில் நுட்பக் காரணங்களைக் கூறி அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அவர்கள் அனைவரும் விசா ரணையைச் சந்திக்க வேண்டும். வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். வழக்கு முடியும்வரை நீதிபதியை மாற்றக் கூடாது” என்று 2017 ஏப்ரல் 19 அன்று உத்தரவிட்டது. வழக்கை லக்னோ சிபிஐ நீதி மன்றத்திற்கும் மாற்றியது.

ஆனால் திட்டமிட்ட 2 ஆண்டு காலத் துக்குள் விசாரணை முடிக்கப்படவில்லை. இதனால் 2020 ஏப்ரல் வரை 9 மாதம் உச்ச நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியது. இந்த 9 மாத அவகாசத்திலும் விசாரணையை முடிக்காத லக்னோ சிபிஐ நீதிமன்றம் கொரோ னாவைக் காரணம் காட்டி, மீண்டும் அவகாசம் கேட்டது. இதுதொடர்பாக லக்னோ நீதிமன்ற நீதி பதி எஸ்.கே. யாதவ் எழுதிய கடிதத்தை நீதி பதிகள் ஆர்.எப். நாரிமன், சூர்ய காந்த் ஆகி யோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு காணொலி மூலம் வெள்ளிக்கிழமையன்று விசாரித்தது. அதைத் தொடர்ந்து, நீதிபதி எஸ்.கே. யாதவின் வேண்டுகோளுக்கு இணங்க, பாபர் மசூதி இடிப்பு வழக்கில், தீர்ப்பு வழங்கு வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31-ம் வரை நீட்டிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.