tamilnadu

img

தில்லியில் வன்முறையைத் தூண்டியவர்களைக் கைது செய்க... உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்

புதுதில்லி:
தில்லியில் வன்முறையைத் தூண்டிய வர்களைக் கைது செய்திட வேண்டும் என்றும்,தலைநகரில் மக்கள் மத்தியில் நல்லிணக் கத்தைப் பேணும் விதத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும்,தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரியும் இணைந்து கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

தில்லியில் நடைபெற்றுவரும் குடியுரிமைத்திருத்தச் சட்டமுன்வடிவிற்கு எதிராகப் போராடிவருபவர்களுக்கு எதிராக, ஏவப்பட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களில் இதுவரை ஒன்பதுபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு காவல்துறை தலைமைக் காவலரும் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவங்கள் தொடர்பாக பிருந்தா காரத்தும், திவாரியும் உள்துறை அமைச்சர்  அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:தலைநகரில் நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்களில் ஒரு காவல்துறையைச் சேர்ந்தவர் இறந்திருப்பதும், ஒன்பது குடிமக்கள் கொல்லப்பட்டிருப்பதும் ஆழ்ந்த கவலைக்குரிய, அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களாகும். காவல்துறையைச் சேர்ந்தவர் மரணத்திற்கும் வன்முறை வெறியாட்டங்களுக்கும் பொறுப்பானவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். தில்லிக் காவல்துறையும் மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகளும் உங்கள்கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். இந்த சம்பவங்கள் தொடர்பாக எங்கள் கவலைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பிரதானமாக, பெண்கள் தலைமையில் நடைபெற்று வரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் அமைதியாகவே நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக, தில்லியில் வன்முறை நிகழ்வுகள் எதுவும் இல்லாமல்தான் இப்போராட்டங் கள் நடைபெற்று வந்தன. இப்போது மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் வன்முறையைத் தூண்டியதைத் தொடர்ந்து கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் தீ வைப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பாககாவல்துறையினருக்கும், உளவு ஸ்தாபனங்களுக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் இத்தகு வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும். எனினும் உளவு ஸ்தாபனங்கள் இவற்றைச் செய்திடத் தவறிவிட்டன; அல்லது தங்களுக்கு வந்துள்ள தகவல்களைக் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துவிட்டன.

ஞாயிறன்று, தில்லி பாஜக தலைவர் கபில் மிஷ்ரா, பல்வேறு மையங்களில் போராடிவரும் கிளர்ச்சியாளர்களை வலுக்கட்டாயமாக அப் புறப்படுத்திட வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருந்தார். கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்ற மையங்களில் அவர்களுக்கு எதிராகஆத்திரமூட்டும் விதத்தில் மதவெறி முழக்கங் கள் எழுப்பப்பட்டமை குறித்தும், இவர்களுக்கு எதிராக ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் தடிகளும், செங்கற்கள் முதலானவற்றுடன் ஆயுதங்கள் வைத்திருந்தது குறித்தும் ஏராளமானசெய்திகளும், வீடியோக்களும் வெளிவந்திருக்கின்றன. ரவுடிகள் எந்த அளவிற்கு மதவெறியுடன் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள் என்பதுகுறித்து ஒரு செய்தியாளர் தெள்ளத்தெளிவாக சாட்சியத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஒருவன் ஒரு காவல்துறையைச் சேர்ந்தவருக்கு எதிராக துப்பாக்கியைக் காட்டுவது போலவும், பின்னர் சுட்டது போலவும் வந்திருக்கிற புகைப்படம் குறித்து, அந்த நபரின் பெயர் ஷாரூக் என்று அடையாளம் தெரிந்திருப்பதும்,  இவன் போன்ற கிரிமினல்கள் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வருகிறது.  

காவல்துறையினரில் ஒரு பிரிவு, கல்லெறியும் குற்றவாளிகளுடன் இணைந்து கொண்டுஇருப்பதை வீடியோ பதிவுகளில் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தில்லிக்காவல்துறையினரின் பெயரைக் கெடுக்கக்கூடிய விதத்தில் இருக்கின்ற இத்தகையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இப்போது மிகவும் முக்கியமான தேவை என்னவெனில், தலைநகரில் அமைதியை உத்தரவாதப்படுத்திட பாரபட்சமற்ற மற்றும் உடனடித் தலையீடும்தான். உள்துறை அமைச்சர் என்ற முறையில், அமைதியை நிலைநாட்டிட நீங்கள்உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்றுதலைநகர் மக்கள் நம்பினார்கள். ஆனாலும்,சம்பவங்கள் நடைபெற்று ஒன்றரை நாட்கள்கழிந்தபின்னர் அமைதி காத்திட வேண்டுமாய்நீங்கள் அறைகூவல் விடுத்ததைக் கண்டு அவர் கள் மிகவும் விரக்தியடைந்திருக்கிறார்கள்.

உங்கள் செல்வாக்கின்கீழ் உள்ள அரசியல் சக்திகளும் அமைதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் அளித்துள்ள அறைகூவலுக்கு செவிசாய்த்திட வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்த வன்முறைச் சம்வங்கள், தில்லி தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடி கிடைத்ததால் அதற்கு எதிராக மக்கள் மீது“பழிக்குப்பழி” வாங்குவதற்காக நடைபெற்ற நிகழ்வுகள் என்று மக்கள் மத்தியில்  ஐயங்கள்எழுந்திருக்கின்றன. அவற்றைப் போக்கும் விதத்தில், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் வன்முறையைத் தூண்டிய, கபில் மிஷ்ரா மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதேபோன்று மக்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பிவருபவர்கள், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரின் மீதும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வர்ணத்தினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கும்பல்தில்லிக்கு வெளியிலிருந்து உள்ளே நுழையாத
வாறும் நடவடிக்கைகளை உத்தரவாதப் படுத்திட வேண்டும்.தலைநகரில் அமைதியை நிலைநாட்டிட செயலில் இறங்குங்கள் என்று நாங்கள் எங்கள்கட்சி ஊழியர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறைகூவல் விடுத்திருக்கிறோம். அவர்கள் தலைநகரில் அமைதியை மீண்டும் கொண்டுவரவும், மத நல்லிணக்கத்தை உத்தரவாதப்படுத்தவும் அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பார் கள் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.இவ்வாறு பிருந்தா காரத்தும், கே.எம். திவாரியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.(ந.நி.)

;