புதுதில்லி, மே 18-வட இந்தியாவில் புகழ்பெற்ற சர்பத் ‘ரூ அப்சா’. குறிப்பாக, இஸ்லாமியர்கள் மிகவும் விரும்பி பருகும் பானமாகஉள்ளது. ரம்ஜான் நோன்பின்போது, இந்த சர்பத்தைபருகி நோன்பை முடிப்பதை, வட இந்திய இஸ்லாமியர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ரோஜாப்பூ எசன்ஸைக் கொண்டு, ஹம்தர்த் என்னும்நிறுவனம் தயாரிக்கும் இந்த சர்பத்திற்கு, ரம்ஜான் மாதத்தில் கடும் தேவை இருக்கும்.ஆனால், தற்போது ‘ரூ அப்சா ’ சர்பத் கிடைப்பதில்லை. ஹம்தர்த் நிறுவனத்தினரின் குடும்பப் பிரச்சனைகாரணமாக ‘ரூ அப்சா’ தயாரிப்பு நடைபெறவில்லை என்றுகூறப்படுகிறது.ஹம்தர்த் நிறுவத்தினரோ, பிரச்சனை எல்லாம் இல்லைஎன்றும், ‘ரூ அப்சா’ தயாரிப்புக்குத் தேவையான முக்கியமான ஒரு மூலிகைப் பொருள் கிடைக்காமல் போனதால்,தயாரிப்பு தடைப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.அதேநேரம் ஹம்தர்த் நிறுவனத்தின் பாகிஸ்தான் கிளையில், ரூஅப்சா சர்பத் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கின்றனர். இந்திய அரசு அனுமதித்தால், வாகா எல்லை வழியாக, டிரக்குகளில் இந்தியாவுக்கு சர்பத்அனுப்ப தயார் என்று அந்நாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இந்திய அரசு பதில் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.