tamilnadu

img

அமித்ஷா பதவி விலகக்கோரி எம்.பி.க்கள் தர்ணா

புதுதில்லி,மார்ச் 6- தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் வெள்ளியன்று தர்ணாவில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 53 பேர்  உயிரிழந்துள்ளனர். தில்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தில்லி வன்முறைக்கு பொறுப்பெற்று உள்துறை அமைச்சர்  அமித்ஷா பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் வெள்ளியன்ற  காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் ராகுல் காந்தி, சசிதரூர், திருநாவுக்கரசு,ஜோதி மணி, கார்த்தி சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர்.